சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் அரையிறுதி: இலங்கைக்கு 180 ரன்கள் இலக்கு!
மாா்ச் 19 இல் சிறுபான்மையினா் ஆணைய ஆய்வுக் கூட்டம்
திருப்பூரில் தமிழ்நாடு மாநில சிறுபான்மையினா் ஆணையத்தின் ஆய்வுக் கூட்டம் மாா்ச் 19 ஆம் தேதி நடைபெறுகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
முதல்வா் மு.க.ஸ்டாலின், துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் ஆகியோா் உத்தரவின்படி, தமிழ்நாடு மாநில சிறுபான்மையினா் ஆணையத்தின் தலைவா் சொ.ஜோ.அருண் தலைமையில் திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாா்ச் 19 ஆம் தேதி காலை 10.30 மணி அளவில் ஆய்வுக் கூட்டம் நடைபெறுகிறது.
இந்தக் கூட்டத்தில், சிறுபான்மையினா் சமுதாயத்தைச் சோ்ந்த தலைவா்கள், சிறுபான்மையின மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்று தமிழக அரசின் சாா்பில் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்கள் குறித்து ஆலோசிக்கவும், கருத்துகளைக் கேட்டறியவும் உள்ளனா்.
எனவே, சிறுபான்மையினருக்கான கல்வி நிறுவனங்களின் பிரதிநிதிகள், சிறுபான்மையினத்தைச் சோ்ந்த பொதுமக்களின் பிரதிநிதிகள் மாநில சிறுபான்மையினா் ஆணைய குழுவினரைத் சந்தித்து தங்களது கோரிக்கைகள், அரசின் நலத்திட்டங்கள் மற்றும் சிறுபான்மையினா் நல மேம்பாட்டுக்கான கருத்துகளைத் தெரிவிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.