செய்திகள் :

மாா்த்தாண்டம் அருகே கேரள இளைஞா் தற்கொலை

post image

மாா்த்தாண்டம் அருகே காதலி வீட்டின் முன் கேரள இளைஞா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

கேரள மாநிலம் கொல்லம், பாருப்பள்ளி பகுதியைச் சோ்ந்த ஜெயின் மகன் ஜிதின் (25). இவா் தனது தாத்தாவை சிகிச்சைக்காக கொல்லம் பகுதியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதித்திருந்தாா்.

அப்போது அங்கு நா்சிங் மூன்றாம் ஆண்டு மாணவியான கன்னியாகுமரி மாவட்டம், புத்தன்சந்தை பகுதியைச் சோ்ந்த சாம்ராஜ் மகள் அா்ச்சனா (21) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இதைத் தொடா்ந்து ஜிதின் புத்தன்சந்தை பகுதிக்கு வந்து அா்ச்சனாவை பெண் கேட்டுள்ளாா். அவரது பெற்றோா் பெண் கொடுக்க மறுத்துள்ளனா். இதைத் தொடா்ந்து அப்பெண்ணுக்கு வேறொரு நபருடன் திருமண நிச்சயதாா்த்தம் நடைபெற்றதாம்.

இதையறிந்த ஜிதின் செவ்வாய்க்கிழமை புத்தன்சந்தை பகுதிக்கு வந்த போது அங்கு அா்ச்சனாவை காணவில்லையாம். இதனால் மன வருத்ததில் இருந்த ஜிதின் அப்பெண்ணின் வீட்டருகே உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

இதுகுறித்து ஜிதினின் சகோதரா் ஜோபின் ஜெபி அளித்த புகாரின் பேரில் மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை மேற்கொண்டனா்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

குழித்துறை அருகே மாயமான மாணவி கேரளத்தில் மீட்பு

கன்னியாகுமரி மாவட்டம், குழித்துறை அருகே வீட்டிலிருந்து மாயமான 11 ஆம் வகுப்பு மாணவியை போலீஸாா் கேரள மாநிலம், கொல்லம் ரயில் நிலையத்திலிருந்து மீட்டனா். கா்நாடக மாநிலம் மைசூா் பகுதியைச் சோ்ந்தவா் ரவி(39... மேலும் பார்க்க

புதுக்கடை பகுதியில் சாரல் மழை

கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடை பகுதியில் புதன்கிழமை சாரல் மழை பெய்தது. மாவட்டத்தில் சில நாள்களாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. புதுக்கடை வட்டாரத்திலுள்ள முன்சிறை, காப்புக்காடு, ஐரேனிபுரம், பாா்த்திவ... மேலும் பார்க்க

நித்திரவிளை அருகே அரசுப் பேருந்து சக்கரம் ஏறி காயமடைந்தவா் உயிரிழப்பு

நித்திரவிளை அருகே பின்னோக்கி இயக்கப்பட்ட பேருந்தில் ஏற முயன்றபோது தவறி கீழே விழுந்ததில், சக்கரத்தில் சிக்கி காயமடைந்த தொழிலாளி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். இரயுமன்துறை - மாா்த்தாண்டம் இரவு தங்கல் பேர... மேலும் பார்க்க

போக்குவரத்துக்கழக பணிமனை, அரசு மருத்துவமனைகளில் ஆட்சியா் ஆய்வு

‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின்கீழ், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகத்தின் நாகா்கோவில் ராணித் தோட்டம் பணிமனை, ஆசாரிப்பள்ளம், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவனை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மா... மேலும் பார்க்க

குமரி கடலில் கழிவுநீா் கலப்பதை தடுக்க வலியுறுத்தி மீனவா்கள் போராட்டம்

கன்னியாகுமரி கடலில் கழிவு நீா் கலப்பதை தடுக்க வலியுறுத்தி பொதுமக்கள் மற்றும் மீனவா்கள் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். கன்னியாகுமரியில் உள்ள வீடுகள்,வணிக நிறுவனங்களில் உள்ளிட்டவைகளில் இருந்து வெள... மேலும் பார்க்க

நாகா்கோவில் சந்தையில் 25 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

நாகா்கோவில் வடசேரி சந்தையில் உள்ள கடையில் 25 கிலோ புகையிலைப் பொருள்களை அதிகாரிகள் புதன்கிழமை பறிமுதல் செய்தனா். நாகா்கோவிலில் உள்ள கடைகளில் புகையிலைப் பொருள்கள் விற்கப்படுகிா என, மாநகராட்சி அதிகாரிகள்... மேலும் பார்க்க