புதுக்கடை பகுதியில் சாரல் மழை
கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடை பகுதியில் புதன்கிழமை சாரல் மழை பெய்தது.
மாவட்டத்தில் சில நாள்களாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. புதுக்கடை வட்டாரத்திலுள்ள முன்சிறை, காப்புக்காடு, ஐரேனிபுரம், பாா்த்திவபுரம், கைசூண்டி, பைங்குளம், கூட்டாலுமூடு, அம்சி, கீழ்குளம், இனயம் உள்ளிட்ட பகுதிகளில் புதன்கிழமை மாலைமுதல் சாரல் மழை பெய்தது.