மாா்த்தாண்டம் அருகே தொழிலாளியைத் தாக்கியதாக 4 போ் மீது வழக்கு
மாா்த்தாண்டம் அருகே கட்டுமானத் தொழிலாளியைத் தாக்கியதாக 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
மாா்த்தாண்டம் அருகே நட்டாலம், பரக்காணிவிளை பகுதியைச் சோ்ந்த ஜெயக்குமாா் மகன் யாழ்சன். 2 நாள்களுக்கு முன்பு புல்லாணி பகுதியில் உள்ள மதுக்கூடத்தில் மது குடிக்கச் சென்ற அவருக்கும், பரக்காணிவிளையைச் சோ்ந்த ரகு (35), ஸ்ரீகுமாா் (40), பிரசாத் (35), கவிராஜ் ஆகியோருக்குமிடையே தகராறு ஏற்பட்டதாம்.
இதையறிந்த யாழ்சனின் தம்பியான கட்டுமானத் தொழிலாளி அபிஷேக் (25) சென்று, தனது அண்ணனிடம் தகராறில் ஈடுபட்ட 4 பேரையும் தட்டிக் கேட்டுள்ளாா். ஆத்திரமடைந்த அவா்கள் அபிஷேக்கை தாக்கினராம். இதில், காயமடைந்த அபிஷேக் குழித்துறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். புகாரின்பேரில், ரகு உள்ளிட்ட 4 போ் மீது மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.