செய்திகள் :

மிட்செல் ஸ்டார்க்காக விரும்பவில்லை..! ஆட்ட நாயகன் ஆவேஷ் கானின் பேட்டி!

post image

ஜெய்பூரில் நேற்றிரவு (ஏப்.19) நடைபெற்ற ராஜஸ்தான் - லக்னௌ அணிகளுக்கு இடையிலான போட்டியில் டாஸ் வென்ற லக்னௌ முதலில் பேட்டிங் செய்து 180 ரன்கள் எடுத்தது.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 178/5 ரன்கள் மட்டுமே எடுத்து 2 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்றது.

கடைசி ஓவரில் 9 ரன்கள் தேவைப்பட்டபோது லக்னௌ அணியின் ஆவேஷ் கான் சிறப்பாக பந்துவீசி 6 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார்.

இந்தப் போட்டியில் 18, 20ஆவது ஓவர்களில் முறையே 5, 6 ரன்களை வழங்கி அசத்தினார்.

4 ஓவர்கள் வீசிய ஆவேஷ் கான் 3 விக்கெட்டுகள் எடுத்து ஆட்ட நாயகன் விருதும் பெற்றார்.

இந்தியாவின் ஸ்டார்க்?

இதேபோல் சமீபத்தில் ராஜஸ்தான் அணிக்கு எதிராக தில்லி வீரர் மிட்செல் ஸ்டார்க் சூப்பர் ஓவரில் அசத்தலாக பந்துவீசி வெற்றிக்கு வித்திட்டார்.

அதனால், பலரும் ஆவேஷ்கானை மிட்செல் ஸ்டார்க்குடன் ஒப்பிட்டு வருகிறார்கள். இது குறித்து ஆவேஷ் கான் கூறியதாவது:

யார்க்கர்தான் எனது பலம்

நான் எப்போதும் யார்க்கர் பந்துகளை மட்டுமே வீச முயல்கிறேன். ஏனெனில், என்னுடைய சிறந்த பந்து யார்க்கர் என்றே நினைக்கிறேன்.

எந்த சூழ்நிலையிலும் யார்க்கர் பந்துகளை வீசவே நினைக்கிறேன். ஐபிஎல் தொடரில் உங்களது பலத்தை நம்பியாக வேண்டும்.

எனக்கு அழுத்தமே இல்லை

செயல்பாட்டில் கவனம் செலுத்துகிறேன். திடலில் பந்தினை எடுத்த பிறகு எப்போதும் அழுத்தத்தில் இருக்க மாட்டேன். எந்தப் பந்தினை வீசினாலும் என்னை 100 சதவிகிதம் நம்புவேன்.

ஐபிஎல் தொடரில் பல போட்டிகளில் அதிகமான இலக்குகள் இருந்துள்ளன. பந்துவீச்சாளர்கள் பல ரன்களை கொடுக்க வேண்டியுள்ளது.

முதல் ஓவரில் நானுமே 13 ரன்களை கொடுத்தேன். ஆனால், போட்டி நம்மிடம் என்ன கேட்கிறது என்பதையே சிந்திப்பேன். பிட்ச் என்ன எதிர்பார்க்கிறது என்பதில் கவனமாக இருப்பேன். ஒன்றைச் செய்து முடித்தலில் நான் கவனம் செலுத்துகிறேன்.

நீங்கள் தவறினால் நான் ஜெயிப்பேன்

ஷிம்ரன் ஹெட்மயர் ஸ்டம்பிலிருந்து விலகியதும் நான் யார்க்கர் பந்துகளை வீச நினைத்தேன்.

ஒரேயொரு ஃபீல்டர்தான் இருந்தார். அவரிடம் சரியாக கேட்ச் சென்றது.

பேட்டர் நகர்ந்தால் நான் யார்க்கர் வீச வேண்டுமென்று மட்டுமே நினைத்தேன். ஏனெனில் பேட்டர் தவறினால் விக்கெட் கிடைக்கும்.

அதேதான் ஜெய்ஸ்வால், ரியான் பாராக்கிற்கும் நடந்தது. நீங்கள் தவறினால், நான் விக்கெட் எடுப்பேன்.

புதிய பேட்டர்களுக்கு கடினம்

புதிய பேட்டர் வந்தால் அவருக்கு எளிதாக இருக்காது எனத் தெரியும். நீண்ட நேரமாக களத்தில் இருக்கும் பேட்டருக்கு ஆட்டம் எளிதாக இருக்கும்.

பந்து கீழே வரும்போது எந்த சூழ்நிலையிலும் புதியதாக பேட்டிங் செய்ய வருபவருக்கு கடினமாகத்தான் இருக்கும்.

ஜெய்ஸ்வால் ஆட்டமிழந்ததும் 2,3 டாட் பந்துகளை வீசினால் ராஜஸ்தான் அணியை ஒடுக்க முடியுமென நினைத்தோம்.

அதே ஓவரில் ரியான் பராக் ஆட்டமிழந்தார். அதனால், 2 புதிய பேட்டர்களுக்கு பந்துவீசும் வாய்ப்பு கிடைத்தது. அந்தச் சூழ்நிலையில் 20 ரன்கள் என்பது மிகப்பெரிய இலக்கு.

ஸ்டார்க் ஆக விரும்பவில்லை

பந்து காற்றில் சென்றதும் மில்லர் பந்தினை பிடிப்பார் என்றே நினைத்தேன். பந்துக்கு கீழே முழுமையாக இருந்தார். அவர் கேட்சை தவறவிட்டதும் எனக்கு மிகவும் வருத்தமடைந்தது. துபே 2 ரன்கள் ஓடிவிட்டார்.

அந்த நேரத்தில் அது ஒரு பந்தில் தீர்மானிக்கப்படும். 4-5 பந்துகள் இருந்திருந்தால் வேறு மாதிரி இருந்திருக்கும். அதனால், ஒற்றை பந்தினை நான் நினைத்தபடி வீசினேன்.

பந்தினை தடுத்ததால் வலி ஏற்பட்டது. நான் வெற்றியைக் கொண்டாடக் கூட முடியவில்லை. முதலில் பந்து எனது எலும்பில் பட்டதாக நினைத்தேன். நட்சத்திரங்களைப் பார்த்து கண் சிமிட்டினேன்.

எனது கை நன்றாக இருக்கிறது. நான் ஸ்டார் ஆக விரும்பவில்லை. நல்ல ஆவேஷ் கான் ஆகவே விரும்புகிறேன். யார்க்கர்தான் எனது பலம். அதையே இந்தத் தொடரில் தொடர விரும்புகிறேன் எனக் கூறினார்.

ஐபிஎல்: சென்னையைப் பந்தாடிய மும்பை! 16 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டியது!

மும்பை: வான்கடேவில் மும்பை இந்தியன்ஸின் ஆதிக்கம் இன்றைய ஆட்டத்திலும் நீடித்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்ணயித்த 177 ரன்கள் இலக்கை 16 ஓவர்களில் எட்டி வெற்றியை ருசித்தது. ஏற்கெனவே 5 ஆட்டங்களில் தோல்விய... மேலும் பார்க்க

ஜடேஜா, துபே, ஆயுஷ் மாத்ரே அதிரடி! மும்பைக்கு 177 ரன்கள் இலக்கு

மும்பை: ஐபிஎல் 38-ஆவது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற 177 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.மும்பை இந்தியன்ஸ் அணியை அதன் சொந்த மண்ணில் வான்கடே திடலில் எதிர்கொண்ட சென்னை சூப்பர் கி... மேலும் பார்க்க

சென்னை அணியில் 17 வயது இளம் வீரர் அறிமுகம்! சீனியர் வீரருக்கு ஓய்வு!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ராகுல் திரிபாதிக்கு இன்றைய ஆட்டத்தில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக 17 வயது இளம் வீரர் ஆயுஷ் மாத்ரே சென்னை அணிக்காக தமது முதல் ஐபிஎல் ஆட்டத்தில் அறிமுக வீரராக... மேலும் பார்க்க

சிஎஸ்கேவுக்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் முதலில் பந்துவீச்சு!

மும்பை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று(ஏப். 20) நடைபெறும் 38-ஆவது ஐபிஎல் லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை அதன் சொந்த மண்ணில் சந்திக்கிறது. வான்கடே திடலில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ஹார... மேலும் பார்க்க

ஐபிஎல்: பஞ்சாப் கிங்ஸ் பரிதாபம்! பெங்களூரு அணி அபார வெற்றி!

சண்டீகர்: ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று(ஏப். 20) நடைபெற்ற 37-ஆவது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு(ஆர்சிபி) அணி வெற்றியை ருசித்தது.டாஸ் வென... மேலும் பார்க்க

பேட்டிங்கில் சொதப்பிய பஞ்சாப்: ஆர்சிபி வெற்றிபெற 158 ரன்கள் இலக்கு!

ஐபிஎல் 2025-இன் 37-ஆவது போட்டியில் முல்லன்பூர் திடலில் நடைபெறும் போட்டியில் ஆர்சிபி, பஞ்சாப் அணிகள் மோதுகின்றன.பஞ்சாப் அணிக்கு எதிராக டாஸ் வென்ற ஆர்சிபி அணியின் கேப்டன் ரஜத் படிதார் பந்துவீச்சைத் தேர்... மேலும் பார்க்க