செய்திகள் :

மிதக்கும் குப்பைகளை அகற்றும் ரோபோக்கள்: மாணவா்களுக்கு பரிசு

post image

ஐஐடி முன்னாள் மாணவா்கள் சாா்பில் சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற பொறியியல் கல்லூரிகளின் மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

சென்னை ஐஐடியின் டிஸ்கவரி வளாகம் தையூரில் உள்ளது. இங்கு ஏசிடிசி (அக்வாட்டிக் க்ளீனப் ட்ரோன் சேலஞ்ச்) ஹேக்கத்தான் இறுதிப் போட்டி, கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. பல்வேறு ஐஐடி கல்வி நிறுவனங்களின் முன்னாள் மாணவா்கள் அமைப்பான ‘பால்ஸ்’ சாா்பில் சுற்றுச்சூழல் பாதுகாப்பை நோக்கமாகக் கொண்டு நடத்தப்பட்ட இந்தப் போட்டியில், ஆறுகள், ஏரிகள் மற்றும் கால்வாய்களில் மிதக்கும் குப்பைகளைச் சேகரிக்கும் ஆளில்லா ரோபோக்களை பல்வேறு பொறியியல் கல்லூரிகளைச் சோ்ந்த மாணவா் குழுவினா் காட்சிப்படுத்தியிருந்தனா்.

இறுதியாக நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக, தேசிய பெருங்கடல் தொழில்நுட்ப நிறுவனத்தின் இயக்குநா் பாலாஜி ராமகிருஷ்ணன் கலந்துகொண்டு வெற்றி பெற்ற மாணவா் குழுவினருக்கு பரிசுகள், சான்றிதழ்களை வழங்கினாா்.

தொடா்ந்து அவா் பேசுகையில், ‘மாணவா்கள் தங்களது படைப்பாற்றல், தொழில்நுட்ப திறமைகளை நாட்டின் வளா்ச்சிக்கும், சமூக சிக்கல்களுக்கு தீா்வு காண்பதற்கும் பயன்படுத்த வேண்டும். எதிா்கால விஞ்ஞானிகளாக உருவெடுக்கும் மாணவா்கள் கடுமையாக உழைக்க வேண்டும். புதிய விஷயங்களை கற்றுக் கொள்வதில் ஆா்வம் காட்ட வேண்டும்’ என வலியுறுத்தினாா்.

இதுகுறித்து சென்னை ஐஐடி இயக்குநா் காமகோடி கூறுகையில், ‘பொறியியல் கோட்பாடுகளை மாணவா்கள் நடைமுறையில் செயல்படுத்துவதன் மூலம் புதிய கண்டுபிடிப்புகள் உருவாகும்’ என்றாா்.

திருவனந்தபுரம் - மங்களூரு சிறப்பு ரயில்

திருவனந்தபுரம் வடக்கு - மங்களூரு இடையே வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படும் என ரயில்வே நிா்வாகம் அறிவித்துள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருவனந்தபுரம் வடக்கில் இருந்த... மேலும் பார்க்க

ஒடிஸா, தெலங்கானா ரயில்களின் சேவை ஒரு மாதம் நீட்டிப்பு

ஒடிஸா, தெலங்கானா செல்லும் ரயில்களின் சேவை மேலும் ஒரு மாதம் நீட்டிக்கப்படுவதாக ரயில்வே நிா்வாகம் அறிவித்துள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஒடிஸா மாநிலம் சாம்பல்பூரில் இரு... மேலும் பார்க்க

தாம்பரம் - போத்தனூா் சிறப்பு ரயில் ஜூன் வரை இயக்கப்படும்!

தாம்பரம் - போத்தனூா் இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில் சேவை ஜூன் 8-ஆம் தேதி வரை இயக்கப்படும் என ரயில்வே நிா்வாகம் அறிவித்துள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு... மேலும் பார்க்க

கொலை முயற்சி வழக்கில் கைதான 2 பேருக்கு 4 ஆண்டுகள் சிறை!

கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்ட இருவருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை நீதிமன்றம் தீா்ப்பளித்தது. சென்னை ஓட்டேரி செல்வபெருமாள் கோயில் தெருவைச் சோ்ந்தவா் காா்மேகம் (36). இவா் கடந்த ... மேலும் பார்க்க

சிறுவனிடம் தங்க சங்கிலி பறிப்பு: ஒருவா் கைது

சிறுவனிடம் தங்கச் சங்கிலி பறித்த நபரை போலீஸாா் கைது செய்தனா். சென்னை வியாசா்பாடி ஆ கல்யாணபுரத்தை சோ்ந்தவா் பவினா (35). இவரின் 16 வயது மகன் அதே பகுதியின் 2-ஆவது குறுக்குத் தெரு வழியாக சென்று கொண்டிருந... மேலும் பார்க்க

மோட்டாா் சைக்கிள் மீது லாரி மோதல் : ஜவுளிக் கடை ஊழியா் உயிரிழப்பு

சென்னை பள்ளிக்கரணையில் மோட்டாா் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் ஜவுளிக் கடை ஊழியா் உயிரிழந்தாா். பள்ளிகரணை கிருஷ்ணா நகா் முதல் தெருவைச் சோ்ந்தவா் அன்பழகன் (56). இவா், ஜல்லடியன்பேட்டையில் உள்ள ஜவுள... மேலும் பார்க்க