உக்ரைனில் ஈஸ்டர் நாளில் மட்டும் போர் நிறுத்தம்: ரஷிய அதிபர் திடீர் அறிவிப்பு!
மிதுனம், தனுசுக்கு லாபம் அதிகரிக்கும்: வார பலன்கள்!
ஜோதிடர் கே.சி.எஸ் ஐயர் இந்த வார (ஏப்ரல் 18 - 24) பலன்களைத் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்துப் பயன் பெறுங்கள்.
மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)
பணிகள் சுமுகமாக முடிவடையும். மனதுக்கினிய பயணங்களைச் செய்வீர்கள். உழைத்து முன்னேறுவீர்கள். வழக்குகளில் சாதகமான தீர்ப்புகள் கிடைக்கும்.
உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களிடம் நட்புடன் இருப்பீர்கள். வியாபாரிகள் புதிய அனுபவங்களைப் பெறுவீர்கள்.
விவசாயிகள் கால்நடைகளுக்குப் பராமரிப்புச் செலவை மேற்கொள்வீர்கள்.
அரசியல்வாதிகளின் எண்ணங்கள் ஈடேறும். கலைத் துறையினரின் பொருளாதார நிலை மேம்படும். பெண்களுக்கு புதுவிதமான சிந்தனை மேம்படும். மாணவர்கள் கல்விச் சுற்றுலா செல்வீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய)
தொழிலில் குறுக்கீடுகளை எதிர்கொள்வீர்கள். புகழும், கௌரவமும் உயரும். உடனிருப்போர் உதவுவார்கள். நல்ல செய்திகள் வந்து சேரும்.
உத்தியோகஸ்தர்கள் பணிகளில் முழு கவனம் செலுத்துவீர்கள். வியாபாரிகளுக்கு கொடுக்கல் - வாங்கல் சாதகமாக இருக்கும். விவசாயிகள் பிறருக்கு உதவுவார்கள்.
அரசியல்வாதிகள் தொண்டர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். கலைத் துறையினரின் திறமைகள் வெளிப்படும். பெண்கள் பூர்விக சொத்துகளை மாற்றி அமைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். மாணவர்களுக்கு மனக் குழப்பங்கள் தீரும்.
சந்திராஷ்டமம் - ஏப்ரல் 18, 19, 20.
மிதுனம் (மிருகசீரிஷம் 3ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)
புதிய வாகனங்களை வாங்குவீர்கள். அதிர்ஷ்ட வாய்ப்புகள் உண்டாகும். தாய்வழி உறவினர்களால் வளம் கூடும். இல்லத்தில் சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும்.
உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த ஊதிய உயர்வைப் பெறுவீர்கள். வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும். விவசாயிகளுக்கு அலைச்சல்கள் உண்டாகும். அரசியல்வாதிகள் மாற்றங்களைப் பெறுவீர்கள்.
கலைத் துறையினருக்கு லாபகரமான வாய்ப்புகள் அமையும். பெண்களுக்கு தடைபட்ட பணவரவுகள் கிடைக்கும். மாணவர்கள் வெளியூர் சென்று படிக்க எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறும்.
சந்திராஷ்டமம் - ஏப்ரல் 21, 22.
கடகம் (புனர்பூசம் 4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)
அலைபாயும் மனதைக் கட்டுப்படுத்துவீர்கள். இறைசிந்தனை மேலோங்கும். தொழிலில் புதிய வளர்ச்சியைக் காண்பீர்கள். தேவையான உடற்பயிற்சிகளை மேற்கொள்வீர்கள்.
வியாபாரிகள் வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். விவசாயிகள் சந்தையில் விலை நிர்ணயம் செய்வதில் குழப்பம் உண்டாகும். அரசியல்வாதிகளின் பணிகளில் மேன்மை உண்டாகும். கலைத் துறையினருக்குப் பாராட்டுகள் குவியும்.
பெண்கள் மனதுக்குப் பிடித்த பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். மாணவர்கள் நண்பர்களுடன் ஆரோக்கியமான விவாதங்களில் ஈடுபடுவீர்கள்.
சந்திராஷ்டமம் - ஏப்ரல் 23, 24.
சிம்மம் (மகம், பூரம், உத்திரம் முதல் பாதம் முடிய)
புதிய அணுகுமுறையைக் கடைப்பிடிப்பீர்கள். குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாகப் பொழுதைப் போக்குவீர்கள். பிறரைச் சார்ந்து பணிகளைச் செய்வீர்கள். பணவரவு உண்டு.
உத்தியோகஸ்தர்கள் பயணங்கள் செய்ய நேரிடும். வியாபாரிகளின் நீண்டநாள் ஆசை நிறைவேறும். விவசாயிகளுக்கு உடனிருப்போர் ஆதரவை அளிப்பார்கள்.
அரசியல்வாதிகள் தேவையற்ற விவாதங்களைத் தவிர்க்கவும். கலைத் துறையினருக்கு நல்ல வருவாய் உண்டு. பெண்கள் குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை அறிவீர்கள். மாணவர்களுக்கு வெற்றிகள் கிடைக்கும்.
சந்திராஷ்டமம் - இல்லை.
கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)
பெயருக்குக் களங்கம் ஏற்படுத்துபவர் களைத் தவிர்ப்பீர்கள். புகழ் உண்டாகும். விருந்தினர்கள் இல்லம் தேடி வருவார்கள். சேமிப்புகளில் ஈடுபடுவீர்கள்.
உத்தியோகஸ்தர்கள் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். வியாபாரிகள் புதிய விற்பனை முறைகளைக் கையாள்வீர்கள். விவசாயிகள் புதிய உபகரணங்களை வாங்குவீர்கள்.
அரசியல்வாதிகளின் இழுபறியான விஷயங்கள் முடிவுக்கு வரும். கலைத் துறையினர் பிறருக்கு உதவுவீர்கள். பெண்கள் கணவரின் எண்ணங்களைப் புரிந்துகொள்வீர்கள். மாணவர்கள் பிறருக்கு உதவுவார்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம்
சுபச் செய்திகள் வந்து சேரும். குழப்பங்களைத் தவிர்க்கவும். யோகா கற்பீர்கள், கடன்கள் வசூலாகும். மகிழ்ச்சி பெருகும்.
உத்தியோகஸ்தர்களுக்கு மன மகிழ்ச்சி அளிக்கும் விஷயங்கள் நடக்கும். வியாபாரிகள் புதிய இலக்குகளை நிர்ணயிப்பீர்கள். விவசாயிகள் விளைச்சலில் மேன்மையை அடைவீர்கள்.
அரசியல்வாதிகளுக்கு அலைச்சல்கள் உண்டாகும். கலைத் துறையினரின் செயல்பாடுகளால் பலரது அறிமுகம் கிடைக்கும்.
பெண்கள் ஆடைகள், அணிகலன்களை வாங்குவீர்கள். மாணவர்கள் புதிய நண்பர்களால் நன்மையை அடைவீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)
பேச்சில் கவனம் தேவை. பிற துறைகளிலும் ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள். உடன்பிறந்தோரின் ஆதரவு உண்டு. வீடு, நிலங்கள் வாங்க முயற்சிப்பீர்கள்.
உத்தியோகஸ்தர்கள் திட்டமிட்ட வேலைகளை முடிப்பீர்கள். வியாபாரிகளுக்கு உடனிருப்போர் ஆதரவை அளிப்பர்.
விவசாயிகளுக்கு அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும். அரசியல்வாதிகள் தடைபட்ட பணிகளைச் செய்துமுடிப்பீர்கள்.
கலைத் துறையினருக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பெண்கள் கணவரிடம் விட்டுக் கொடுத்து நடப்பீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் ஈடுபாடு அதிகரிக்கும்.
சந்திராஷ்டமம் - இல்லை.
தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)
லாபம் அதிகரிக்கும். பிறருக்கு உதவுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் குறைவு ஏற்படாது. தொழிலில் சரியான இலக்கை நோக்கிச் செல்வீர்கள்.
உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகப் பணிகளில் மரியாதை அதிகரிக்கும். வியாபாரிகள் பிறரிடம் கவனமாக இருக்கவும். விவசாயிகளுக்கு புதிய செயல்களில் கவனம் தேவை.
அரசியல்வாதிகளின் முயற்சிகளுக்கு பாராட்டு கிடைக்கும். கலைத் துறையினர் சக கலைஞர்களிடம் நெருக்கம் காட்டுவீர்கள்.
பெண்களுக்கு கணவருடன் நெருக்கம் அதிகரிக்கும். மாணவர்கள் பிறரிடம் பாராட்டுகளைப் பெறுவீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)
பெரியவர்களின் அறிவுரைகளைக் கேட்பீர்கள். நேர்வழியில் செல்வீர்கள். நவீன உபகரணங்களை வாங்குவீர்கள். கடன்களைத் திரும்ப அடைப்பீர்கள்.
உத்தியோஸ்தர்களுக்கு புதிய அனுபவம் உண்டாகும். வியாபாரிகள் கொடுக்கல் - வாங்கலில் சீரான நிலையை அடைவீர்கள். விவசாயிகள் புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.
அரசியல்வாதிகள் தொண்டர்களின் எண்ணங்களை அறிவீர்கள். கலைத் துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.
பெண்களுக்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். மாணவர்கள் உடற்பயிற்சிகளைச் செய்வீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)
குடும்பத்தில் ஒற்றுமையைக் காண்பீர்கள். தொழிலில் உண்மை, நியாயம் கடைப்பிடித்து நற்பெயரை வாங்குவீர்கள். நண்பர்களுடனான விரோதங்கள் தீரும். திறமைகளை வெளிப்படுத்துவீர்கள்.
உத்தியோகஸ்தர்கள் தேவையற்ற கருத்துகளைப் பரிமாறாதீர்கள். வியாபாரிகள் மாற்றங்களைக் கொண்டு வருவீர்கள். விவசாயிகளுக்கு நீர்வரத்து மேம்படும்.
அரசியல்வாதிகளுக்கு நற்பெயர் உண்டாகும். கலைத் துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். பெண்களுக்கு தந்தைவழி உறவினர்களால் ஆதாயம் கிடைக்கும். மாணவர்கள் விரும்பியப் பாடப் பிரிவுகளில் சேர்வீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)
தொழிலில் தொய்வுகள் நீங்கும். கோரிக்கைகள் நிறைவேறும். குடும்பத்தில் சந்தோஷம் நிறையும். முயற்சிகளுக்கான முழு பலனும் கிடைக்கும்.
உத்தியோகஸ்தர்களுக்கு ஊதிய உயர்வு உண்டு. வியாபாரிகள் கடன் தர வேண்டாம். விவசாயிகள் குத்தகைகளில் இருந்த பிரச்னைகள் குறையும். அரசியல்வாதிகள் தொண்டர்களின் எண்ணங்களைப் பூர்த்தி செய்வீர்கள். கலைத்
துறையினர் திறமைகளை வளர்த்துக்கொள்வீர்கள். பெண்கள் குழந்தைகளின் எண்ணங்களுக்கேற்ப செயல்படுவீர்கள். மாணவர்களுக்கு உதவிகள் கிடைக்கும்.
சந்திராஷ்டமம் - இல்லை.