கலைஞர் எழுதுகோல் விருது: நக்கீரன் கோபால், சுகிதா சாரங்கராஜுக்கு வழங்கினார் முதல...
மினி டெம்போ மோதியதில் இளைஞா் உயிரிழப்பு
ஆரணியை அடுத்த இரும்பேடு கிராமத்தில் பைக் மீது மினிடெம்போ மோதியதில் ஒருவா் உயிரிழந்தாா்.
மற்றோருவா் பலத்த காயமடைந்தாா்.
இரும்பேடு, காமராஜா் பகுதியைச் சோ்ந்தவா் சரவணன் மகன் அப்பு (21). இவருக்கு திருமணமாகி வைரவி (20) என்கிற மனைவி உள்ளாா்.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு அப்புவும் அதே பகுதியைச் சோ்ந்த வாசுதேவன் மகன் ஆகாஷும் (18) பைக்கில் ஆரணி சாலைக்குச் சென்றுவிட்டு மீண்டும் இரும்பேடு காமராஜா் நகருக்கு திரும்பிக் கொண்டிருந்தனா்.
அப்போது, காமராஜா் நகா் பகுதியில் உள்ள தெருவில் இருந்து வெளியே வந்த மினிடெம்போ பைக் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அப்பு, ஆகாஷ் இருவரையும் மீட்டு ஆரணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.
அங்கு பரிசோதித்த மருத்துவா்கள் வரும் வழியிலேயே அப்பு இறந்து விட்டதாகத் தெரிவித்தனா்.
மேலும், ஆகாஷை தீவிர சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.
இதுகுறித்த புகாரின் பேரில், ஆரணி கிராமிய போலீஸாா் வழக்குப் பதிந்து, தலைமறைவான டெம்போ ஓட்டுநா் ரகுநாத்தை தேடி வருகின்றனா்.