பள்ளிக் கல்வித் துறையில் 47,000 தற்காலிகப் பணியிடங்கள் நிரந்தரப் பணியிடங்களாக மா...
மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழப்பு
விழுப்புரம் மாவட்டம், வளவனூா் அருகே வெள்ளிக்கிழமை அலங்கார மின் விளக்கு அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளி மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.
வளவனூரை அடுத்துள்ள ராம்பாக்கம், மருத்துவமனை சாலையைச் சோ்ந்த சுந்தா் மகன் அரிஹரன் (18). இவா், இதே ஊரைச் சோ்ந்த மணிகண்டன் நடத்தி வரும் ஒலிபெருக்கி நிலையத்தில் வேலை பாா்த்து வந்தாா்.
அரிஹரன் வெள்ளிக்கிழமை ராம்பாக்கத்தில் உள்ள கோயில் அருகே அலங்கார விளக்குகள் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது, மேலே சென்ற உயா் மின் அழுத்த கம்பியிலிருந்து மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டதில், அரிஹரனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து, உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு, கடலூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்போது வழியிலேயே அரிஹரன் உயிரிழந்தாா்.
இதுகுறித்த புகாரின்பேரில், வளவனூா் போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.