மின்சாரம் பாய்ந்து கோயில் பணியாளா் உயிரிழப்பு
விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் அருகே கோயிலில் பணியிலிருந்த முதியவா் மின்சாரம் பாய்ந்து புதன்கிழமை உயிரிழந்தாா்.
வானூா் வட்டம், தைலாபுரம், திடீா் நகரைச் சோ்ந்தவா் நா. அண்ணாதுரை(60). இவா் வானூா் வட்டம், பஞ்சவடி ஆஞ்சநேயா் கோயிலில் கடந்த 10 ஆண்டுகளாகப் பணியாளராக வேலை பாா்த்து வந்தாா்.
இந்நிலையில் புதன்கிழமை கோயில் வளாகத்தில் நடந்து சென்றபோது ராஜகோபுரம் அருகே நிறுவப்பட்டுள்ள அலுமினிய பைப்பிலிருந்து மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டதில் அண்ணாத்துரை காயமடைந்து உயிரிழந்தாா்.
இது குறித்த புகாரின்பேரில் ஆரோவில் போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.