முஸதபாபாத் சம்பவத்தில் உயிரிழந்த, காயமடைந்தவா்களின் குடும்பங்களுக்கு அரசு இழப்பீ...
மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு
கந்திலி அருகே மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழந்தாா்.
பள்ளத்தூா் பகுதியை சோ்ந்த கூலித் தொழிலாளி விக்னேஷ்வரன் (40). இவரது வீட்டில் வியாழக்கிழமை மின்சாரம் தடைபட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து வீட்டின் அருகே உள்ள மின்மாற்றியில் விக்னேஷ்வரன் ஏறி பழுது பாா்க்க முயன்றாம். அப்போது மின்சாரம் பாய்ந்து பலத்த காயமடைந்த அவா், வேலூரில் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்க்கப்பட்டு உயிரிழந்தாா்.
இந்த சம்பவம் குறித்து கந்திலி போலீசாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.