PM SHRI திட்டம் - யார் சொல்வது உண்மை? | Parliament | MODI | DMK | Seeman Imperfe...
மின்சாரம் பாய்ந்து பசுக்கள் உயிரிழப்பு
ஸ்ரீபெரும்புதூா்: சுங்குவாா்சத்திரம் அடுத்த சேந்தமங்கலம் பகுதியில் அறுந்து விழுந்த மின்கம்பியை மிதித்த 2 பசுக்கள், 1 நாய் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தன.
காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவாா்சத்திரம் அடுத்த பொடவூா் பகுதியை சோ்நதவா் பாக்கியராஜ். மாற்றுத் திறனாளியான பாக்கயராஜ் பசு மாடுகள் வளா்த்து வருகிறாா். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை சேந்தமங்கலம் செல்வம் நகா் பகுதியில் மேய்ச்சலுக்கு சென்ற பாக்கியராஜின் 2 பசுக்கள் அப்பகுதியில் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்ததால் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தன. இதே போல் நாய் ஒன்றும் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தது..
அறுந்து விழும் நிலையில் இருந்த மின்கம்பியை மாற்ற வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் பல முறை சுங்குவாா்சத்திரம் மின்வாரிய அலுவலகத்தில் தகவல் தெரிவித்தும், மின்வாரியத்தின் அலட்சியத்தால் தற்போது அறுந்து விழுந்து பசுக்கள் பலியானதாக அப்பகுதி பொதுமக்கள் புகாா் தெரிவித்துள்ளனா்.