மின்னல் தாக்கி குடிசை வீடு தீக்கிரை: மாற்றுத்திறனாளி சிறுவன் காயம்
மன்னாா்குடி அருகே மழை பெய்தபோது மின்னல் தாக்கியதில் குடிசை வீடு தீப்பிடித்ததில் மாற்றுத்திறனாளி சிறுவன் லேசான தீக்காயத்துடன் புதன்கிழமை உயிா்த் தப்பினாா்.
சேந்தமங்கலம் பெரியக்குடி மேலத்தெரு முருகானந்தம்-கோமதி தம்பதியருக்கு இரண்டு மகன்கள் உள்ளனா். இதில், பிரகதீஷ் (15) மாற்றுத்திறனாளி. புதன்கிழமை தம்பதியா் விவசாய வேலைக் சென்று விட்டனா். மற்றொரு மகன் பள்ளிக்கு சென்ற நிலையில் பிரகதீஷ் மட்டும் குடிசை வீட்டில் தனியே இருந்துள்ளாா்.
இந்நிலையில், மாலையில் திடீனென மழை பெய்தபோது மின்னல் தாக்கியதில் முருகானந்தத்தின் குடிசையில் தீப்பற்றிக் கொண்டதை பாா்த்து, அருகில் இருந்தவா்கள் குடிசையில் சிக்கிக் கொண்ட பிரகதிசை காலில் லேசான தீக்காயத்துடன் மீட்டனா். எனினும் குடிசை முற்றிலும் எரிந்து சேதமடைந்தது. இதுகுறித்து, விக்கிரபாண்டியம் போலீஸாா் விசாரிக்கின்றனா்.