Bigg Boss 9: 'அறிவு இருக்குறவுங்களுக்கு ஒரு விஷயம் சொன்னப் புரியும்'- பார்வதியை...
மின்னல் வேகத்தில் பறந்த கார்; கோவை ஜி.டி.நாயுடு மேம்பாலத்தில் நடந்த கோர விபத்து - 3 பேர் பலி
கோவை அவிநாசி சாலையில் உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் பகுதி வரை 10.10 தொலைவுக்கு மேம்பாலம் அமைக்கப்பட்டது. இதற்கு தமிழ்நாடு அரசு ஜி.டி. நாயுடு மேம்பாலம் என பெயரிட்டு கடந்த 9-தேதி திறந்து வைக்கப்பட்டது.

கோவையில் நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட பாலம் என்பதால், மக்கள் அதில் பயணிக்க அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள். இதனால் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு வருகிறது. பல வாகனங்கள் கட்டுப்பாடின்றி அதி வேகமாக வாகனங்களை இயக்கி வருவதாகவும் புகார் உள்ளது.
இந்நிலையில் நள்ளிரவு 2 மணியளவில் உப்பிலிபாளையம் பகுதியில் இருந்து, கோல்ட்வின்ஸ் பகுதிக்கு ஒரு கார் சென்றுள்ளது. மேம்பாலத்தில் அந்த கார் அதிவேகமாக பயணித்ததாக கூறப்படுகிறது. அப்போது பாலத்தில் இருந்து வேகமாக இறங்கியும்போது, கட்டுப்படுத்த முடியாமல் சாலையோரம் நின்றிருந்த லாரி மீது மோதியது.

இதில் காரில் இருந்த இளம் பெண் உள்ளிட்ட 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். முதல்கட்ட விசாரணையில் காரில் பயணித்தவர்கள் இருகூர் பகுதியைச் சேர்ந்த சேக் உசேன், இளம் பெண் மற்றும் இளைஞர் என்று தெரியவந்துள்ளது.
இந்த விபத்தில் அவர்கள் பயணித்த கார் அப்பளம் போல நொறுங்கியது. இதனால் காவல்துறையினர் நீண்ட முயற்சிக்கு பிறகே காரில் உள்ள உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கோவை ஜி.டி.நாயுடு மேம்பாலத்தில் வேக கட்டுப்பாடு இல்லாதது, சிசிடிவி வைத்து கண்காணிக்காதது, முறையான தகவல் பலகை இல்லாதது, இரவு நேர போக்குவரத்து பற்றி வெளியான மாறுபட்ட தகவல்கள் ஆகியவை தான் விபத்திற்கு காரணம் என்று தகவல் வெளியாகியுள்ளது.