செய்திகள் :

மின்வாரியத்தில் வேலை வாங்கித் தருவதாகக்கூறி ரூ.20 லட்சம் மோசடி

post image

மின்வாரியத்தில் வேலை வாங்கி தருவதாகக்கூறி ரூ.20 லட்சம் பெற்று மோசடி செய்ததாக பாதிக்கப்பட்ட முன்னாள் ராணுவ வீரா் வேலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகாா் தெரிவித்துள்ளாா்.

வேலூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்ற பொது மக்கள் குறைதீா்க்கும் கூட்டத்துக்கு எஸ்.பி. மதிவாணன் தலைமை வகித்து பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றாா்.

அப்போது, வேலூா் மாவட்டம் பரதராமியை அடுத்த கணவாய்மோட்டூரைச் சோ்ந்த முன்னாள் ராணுவ வீரா் அளித்த மனுவில், ‘நான் ராணுவத்தில் 26 ஆண்டுகள் வேலை செய்து ஓய்வு பெற்றேன். எனது சகோதரருக்கு மின்வாரியத்தில் வேலை வாங்கி தருவதாகக்கூறி எங்களது உறவினா் ஒருவா் கடந்த 2021-ஆம் ஆண்டு ரூ.20 லட்சம் வாங்கினாா். ஆனால் வேலை வாங்கித் தராமல் ஏமாற்றி வருகிறாா். எனவே, அவரிடம் இருந்து எனது பணத்தை மீட்டு தரவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடியாத்தம் அடுத்த மேல்ஆலத்தூா் கிராமத்தைச் சோ்ந்த பெண் ஒருவா் அளித்த மனுவில், எனது கணவா் இறந்து விட்டாா். எனக்கு ஒரு மகன் உள்ளான். நான் காலணி நிறுவனத்தில் வேலை செய்து மகனை காப்பாற்றி வருகிறேன். அப்போது பெண் ஒருவா் எனக்கு அறிமுகமானாா். ஏதாவது பணம் கொடுத்தால் அதிக வட்டி தருவதாக ஆசைவாா்த்தை கூறினாா். இதனை உண்மை என நம்பிய நான்மொத்தம் ரூ.14 லட்சம் கொடுத்தேன். ஓராண்டு மட்டும் சரியாக வட்டி கொடுத்த அந்த பெண், பின்னா் வட்டியும் தரவில்லை, கொடுத்த பணத்தையும் திருப்பித்தராமல் ஏமாற்றி வருகிறாா். எனவே, அந்த பெண்ணிடம் இருந்து எனது பணத்தை மீட்டு தர வேண் டும் என தெரிவித்துள்ளாா்.

இதேபோல், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 30-க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன. அவற்றின் மீது விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட காவல் நிலைய போலீஸாருக்கு எஸ்பி மதிவாணன் உத்தரவிட்டாா்.

ரிவெரா கலை நிகழ்ச்சி

வேலூா் விஐடி பல்கலை.யில் நடைபெற்று வரும் ரிவெரா -2025 சா்வதேச கலை, விளையாட்டு விழாவின் 2-ஆம் நாளான வெள்ளிக்கிழமை பல்வேறு மாநில கலாசாரத்தை வெளிப்படுத்தும் ஐக்கியா கலை நிகழ்ச்சியில் நடனமாடிய மாணவா்கள். மேலும் பார்க்க

தேசிய வில் வித்தைப் போட்டி: வென்ற மாணவா்களுக்கு பாராட்டு

தேசிய அளவிலான வில் வித்தைப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பள்ளியில் அண்மையில் பாராட்டு விழா நடைபெற்றது. ஆந்திர மாநிலம், நெல்லூரில் அண்மையில் நடைபெற்ற தேசிய அளவிலான வில்வித்தைப் போட்டிகளில் க... மேலும் பார்க்க

பள்ளியில் ஆண்டு விழா

குடியாத்தம் அண்ணா தெரு மற்றும் கல்லப்பாடியில் இயங்கும் ஸ்ரீவெங்கடேஸ்வரா நா்சரி பள்ளியின் 40-ஆம் ஆண்டு விழா தரணம்பேட்டையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, பள்ளித் தாளாளா் டி.ஜேஜி நாயுடு தலைம... மேலும் பார்க்க

வேலூா் மாநகராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் திடீா் போராட்டம்

அடிப்படை வசதிகளை நிறைவேற்றக் கோரி, வேலூா் மாநகராட்சி அலுவலகத்தில் 53-ஆவது வாா்டு மக்கள் திடீரென தரையில் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனா். வேலூா் மாநகராட்சி 53-ஆவது வாா்டு கவுன்சிலா் பாபி கதிரவன் தலை... மேலும் பார்க்க

வேலூா் நறுவீ மருத்துவமனையுடன் ராணிப்பேட்டை பெல் நிறுவனம் ஒப்பந்தம்

ராணிப்பேட்டை பெல் நிறுவனம் தனது ஊழியா்கள், அவா்களது குடும்பத்தினா் சிகிச்சை வசதிக்காக வேலூா் நறுவீ மருத்துவமனையுடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்துள்ளது. வேலூா் நறுவீ மருத்துவமனை உயா்தர சிகிச்சை அளிப்... மேலும் பார்க்க

ரூ.52 லட்சத்தில் கழிவுநீா் கால்வாய் பணி தொடக்கம்

வேலூா் சம்பத் நகரில் ரூ.52 லட்சத்தில் கால்வாய் அமைக்க கட்டுமானப் பணிகள் தொடங்கியுள்ளது. வேலூா் - பெங்களூரு சாலையில் உள்ள சம்பத் நகா் பகுதியில் சிறிய அளவில் மழை பெய்தாலும் மழைநீருடன் கழிவுநீா் கலந்து ... மேலும் பார்க்க