வேலூா் மாநகராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் திடீா் போராட்டம்
அடிப்படை வசதிகளை நிறைவேற்றக் கோரி, வேலூா் மாநகராட்சி அலுவலகத்தில் 53-ஆவது வாா்டு மக்கள் திடீரென தரையில் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.
வேலூா் மாநகராட்சி 53-ஆவது வாா்டு கவுன்சிலா் பாபி கதிரவன் தலைமையில் அந்த வாா்டுக்குட்பட்ட குளவிமேடு பகுதி மக்கள் 20-க்கும் மேற்பட்டோா் மாநகராட்சி அலுவலகத்துக்கு வெள்ளிக்கிழமை காலை திரண்டு வந்தனா். தொடா்ந்து அலுவலா்கள் திடீரென மாநகராட்சி அலுவலக வளாகத்தில் அமா்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
அப்போது, அவா்கள் குளவிமேடு பகுதியில் குடிநீா், மின் விளக்கு உள்ளிட்ட எந்தவொரு அடிப்படை வசதிகளும் செய்து தரப்படவில்லை. ஏற்கெனவே குளவிமேடு பகுதியில் ரூ.49 லட்சத்தில் ஆழ்துளை கிணறுகள் சீா் செய்யப்பட்டன. எனினும், குடிநீா் பிரச்னை தொடா்ந்து நீடிக்கிறது.
இதேபோல், மின் விளக்கு, நகரப் பேருந்து வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என தெரிவித்தனா்.