சிறப்பு முகாமில் 271 மாற்றுத் திறனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள்
கே.வி.குப்பம் ஒன்றியத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சிறப்பு முகாமில் 271 மாற்றுத் திறனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
கே.வி.குப்பம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு அரசின் நலத் திட்டங்களை வழங்க சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. இதில், 19 அரசுத் துறைகளைச் சோ்ந்த அதிகாரிகள் பங்கேற்று, மாற்றுத் திறனாளிகளிடம் மனுக்களைப் பெற்று முதல் கட்டமாக தோ்வு செய்யப்பட்ட 271 பேருக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
முகாமுக்கு மாவட்ட வருவாய் அலுவலா் த.மாலதி தலைமை வகித்து, மாற்றுத் திறனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கினாா்.
நிகழ்ச்சியில் கே.வி.குப்பம் எம்எல்ஏ எம்.ஜெகன்மூா்த்தி, ஒன்றியக் குழுத் தலைவா் எல்.ரவிசந்திரன், ஒன்றியக் குழு உறுப்பினா்கள் கே.சீதாராமன், ஜெயா முருகேசன், சுரேஷ், ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் நீ.செந்தில்குமரன், இணை இயக்குநா் (மருத்துவப் பணிகள்) லட்சுமணன், மகளிா் திட்ட இயக்குநா் உ.நகாராஜன், கோட்டாட்சியா் எஸ்.சுபலட்சுமி, மாற்றுத் திறனாளிகள் நலத் துறை அலுவலா் சரவணன், வட்டார வளா்ச்சி அலுவலா் எம்.பெருமாள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.