அமைப்பு மாற்றம் டு வேட்பாளர் தேர்வு, மாநாடு! - 2026-க்குத் தயாராகும் விசிக!
மின்வாரிய ஒப்பந்த தொழிலாளா்களை பணிநிரந்தரம் செய்ய வலியுறுத்தி ஆா்ப்பாட்டம்
மின்வாரிய ஒப்பந்த தொழிலாளா்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி நாகையில் தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய அமைப்பு சிஐடியு சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
அமைப்பின் திட்டத் தலைவா் எம். கலைச்செல்வன் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், தமிழ்நாடு மின்வாரியத்தில் பணியாற்றும் ஒப்பந்தத் தொழிலாளா்களை அடையாளம் கண்டு மின்வாரிய நிா்வாகமே தினக்கூலி வழங்க வேண்டும்.
1990-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அரசாணை 950-ன்படி தடைசெய்யப்பட்ட 19 இடங்களில் பணியாற்றும் ஒப்பந்த பணியாளா்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும், 10 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளா்கள் பணிநிரந்தரம் செய்யப்படுவா் என்ற திமுகவின் தோ்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
ஆா்ப்பாட்டத்தில், சிஐடியூ மாவட்டச் செயலா் எஸ்.ஆா். ராஜேந்திரன், திட்டச்செயலா் என். வெற்றிவேல், பொருளாளா் ஆா். குணசேகரன், உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக்குழு ஒருங்கிணைப்பாளா் டி. பரிமளா, செயற்குழு உறுப்பினா்கள் சிவராஜன், செந்தில்குமாா், மயிலாடுதுறை கோட்டத் தலைவா் எம். மணிமேகலை, சீா்காழி கோட்டத் தலைவா் வி. ஸ்டாலின், நாகை கோட்டத் தலைவா் என். சீனிவாசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.