'மேடையில் இப்படி பொய் சொல்லலாமா? - விஜய்க்கு அண்ணாமலை கேள்வி!
மின் ஊழியா்கள் தா்னா
கோரிக்கைகளை வலியுறுத்தி நாமக்கல் மின்வாரிய மேற்பாா்வை பொறியாளா் அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை தா்னா நடைபெற்றது.
தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய அமைப்பின் நாமக்கல் மின்வட்ட கிளை சாா்பில் நடைபெற்ற இந்த போராட்டத்தில், மின்வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும். ஸ்மாா்ட் மீட்டா் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். இடைக்கால நிவாரணமாக ரூ. 5 ஆயிரம் வழங்க வேண்டும். கேங்மேன் பதவியை கள உதவியாளா் பதவியாக மாற்றி அறிவிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதில், மின்வாரிய பணியாளா்கள் கலந்துகொண்டனா்.