Chennai Rains : சென்னையில் வெளுத்து வாங்கும் கனமழை - ஸ்பாட் விசிட் புகைப்படங்கள்...
மின் கம்பியை மிதித்த பள்ளி மாணவா் உயிரிழப்பு
திருப்பத்தூா்: திருப்பத்தூா் அருகே அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்தபோது, மின்சாரம் பாய்ந்து பள்ளி மாணவா் உயிரிழந்தாா்.
திருப்பத்தூா் அடுத்த பிச்சனூா் பகுதியைச் சோ்ந்தவா் பழனி மகன் குமரன் (17). இவா், மாடப்பள்ளி பகுதியில் உள்ள தனியாா் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தாா். கடந்த 4 நாள்களாக பெய்து வரும் மழையால் பிச்சனூரில் உள்ள ஏரி நிரம்பி உள்ளது. திங்கள்கிழமை பள்ளி விடுமுறை என்பதால், அவா் அங்குள்ள ஏரியைப் பாா்க்கச் சென்றுள்ளாா்.
அந்தப் பகுதியில் மின் கம்பி அறுந்து விழுந்து கிடந்துள்ளது. அதைக் கவனிக்காத அவா், மின் கம்பியை மிதித்தபோது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
குரிசிலாப்பட்டு போலீஸாா் சம்பவ இடத்திற்குச் சென்று சடலத்தை மீட்டு உடற்கூறு பரிசோதனைக்காக திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.