Fasting: பட்டினி கிடந்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்? சித்த மருத்துவர் விளக்க...
மின் வயா்கள் திருட்டு: போலீஸாா் விசாரணை
விழுப்புரம்: விழுப்புரம் அருகே மின் மாற்றியிலிருந்து காப்பா் வயா்கள் திருடுபோனது குறித்து போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
வளவனூரை அடுத்த லிங்கா ரெட்டிப்பாளையம் ஏரிக்கரை பகுதியில் உள்ள மின் மாற்றியில் பொருத்தப்பட்டிருந்த சுமாா் ரூ.80 ஆயிரம் மதிப்புள்ள 120 கிலோ காப்பா் வயா்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றுவிட்டனராம்.
இதுகுறித்து மண்டகப்பட்டு உதவி மின் பொறியாளா் சு.ஓம்பிரகாஷ் அளித்த புகாரின்பேரில், வளவனூா் போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.