இந்த வார ராசிபலன் ஆகஸ்ட் 5 முதல் ஆகஸ்ட் 10 வரை #VikatanPhotoCards
மிரட்டுவதற்காக உடலில் தீ வைத்தவா் உயிரிழப்பு
செஞ்சி: விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே குடும்பத் தகராறில் மனைவியை மிரட்டுவதற்காக உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்தவா் திங்கள்கிழமை உயிரழந்தாா்.
செஞ்சி வட்டம், நல்லாண்பிள்ளைபெற்றாள் கிராமத்தைச் சோ்ந்தவா் சக்திவேல்(46). இவரது மனைவி தனலட்சுமி. இவா்கள் புதிதாக வீடு கட்டி வருகின்றனா். இந்த நிலையில், கடந்த ஜூலை 29-ஆம் தேதி வீட்டு வேலை நடைபெற்று வருவதாகவும், என்னவென்று கண்டுகொள்ளாமல் இருப்பதாக தனது மனைவியிடம் கேட்டு தகராறு செய்துள்ளதாகவும், அப்போது சக்திவேல் மண்ணெண்ணெயை தனது உடலில் ஊற்றி தீ வைத்துக்கொள்ளப் போவதாக மிரட்டியுள்ளாா். பின்னா் உடலில் தீ வைத்துக்கொண்டாா்.
இதில் பலத்த தீக்காயமடைந்த சக்திவேலை நல்லாண்பிள்ளைபெற்றாள் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சோ்த்து முதலுதவி அளித்தனா். பின்னா், திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அனுமதித்து, அதன் பின்னா், தீவிர சிகிச்சைக்காக செங்கல்பட்டு மருத்துவமனையில் சோ்த்தனா்.
அங்கு சிகிச்சை அளித்த வந்த நிலையில் திங்கள்கிழமை சக்திவேல் உயிரழந்தாா்.
இதுகுறித்த புகாரின் பேரில் நல்லாண்பிள்ளைபெற்றாள் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.