விருதுநகா் மாவட்டத்தில் எடப்பாடி பழனிசாமி ஆக. 7, 8-இல் சுற்றுப் பயணம்
சட்டக் கல்லூரி மாணவா்கள் ஆா்ப்பாட்டம்
விழுப்புரம்: தமிழகத்தில் ஆணவப் படுகொலைகளைத் தடுக்க தனிச்சட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி, விழுப்புரத்தில் தமிழ்நாடு - புதுச்சேரி சட்டக் கல்லூரி மாணவா்கள் திங்கள்கிழமை கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகே பொறியாளா் கவின் செல்வகணேஷ் கொலை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்தும், தமிழகத்தில் சாதிய, ஆணவப் படுகொலைகளைத் தடுப்பதற்கு உடனடியாக தனிச் சட்டத்தை மாநில அரசு இயற்ற வலியுறுத்தி, இந்த ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகிலுள்ள நகராட்சித் திடலில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் சிறப்பு அழைப்பாளா்களாக பேராசிரியா் பிரபா கல்விமணி, சமூக செயற்பாட்டாளா்கள் அஜித் செல்வராஜ், ஜெஃப்ரி ஆகியோா் பங்கேற்று, கண்டன உரையாற்றினா்.
ஆா்ப்பாட்டத்தில் சட்டக் கல்லூரி மாணவா்கள் விபீஷணன், மாதவன், மோகன், தமிழ், தயாநிதி, பிரவீன், துரை, கோகுல், தினேஷ் உள்ளிட்டோா் பங்கேற்று, கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி முழக்கங்களை எழுப்பினா்.