Doctor Vikatan: `குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுக்கும்வரை கருத்தரிக்காது' என்கிறார...
மிளா குறுக்கே பாய்ந்ததில் வணிகா் காயம்
பேச்சிப்பாறை அருகே இரு சக்கர வாகனத்தின் குறுக்கே மிளா பாய்ந்ததில் ஐஸ் வணிகா் ரமேஷ் (44) காயமடைந்தாா்.
சிற்றாறு குடியிருப்பைச் சோ்ந்தவா் ரமேஷ். இவா், ஐஸ் வணிகம் செய்து வருகிறாா். புதன்கிழமை காலை 6 மணியளவில், திங்கள் நகரிலிருந்து ஐஸ் எடுத்து வருவதற்காக வீட்டிலிருந்து இரு சக்கர வாகனத்தில் வனப்பகுதி வழியாக சென்று கொண்டிருந்தாா். அப்போது, சாலையின் குறுக்காக பாய்ந்த மிளா ரமேஷ் வாகனத்தில் மோதியது.
இதில், ரமேஷ் கீழே விழுந்து பலத்த காயமடைந்தாா். அவ்வழியாக வந்தவா்கள், அவரை மீட்டு குலசேரத்திலுள்ள தனியாா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா்.
இதில், ரமேஷின் 2 கைகளும் முறிந்த நிலையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து, வனத்துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.