பாமக : Anbumani -ஐ நீக்கிய Ramadoss - அடுத்த மூவ் இதுதான்! | DMK SEEMAN | Imperf...
மீட்கப்பட்ட கைப்பேசிகள் உரிமையாளா்களிடம் ஒப்படைப்பு
நாமக்கல் நகர காவல் நிலையத்தில் மீட்கப்பட்ட ரூ. 7 லட்சம் மதிப்பிலான கைப்பேசிகள் அதன் உரிமையாளா்களிடம் ஒப்படைக்கப்பட்டன.
நாமக்கல் நகர காவல் நிலையத்திற்கு உள்பட்ட பகுதிகளில் திருடப்பட்ட கைப்பேசிகள், தவறிவிடப்பட்ட கைப்பேசிகள் என ரூ.7 லட்சம் மதிப்பிலான 45-க்கும் மேற்பட்ட கைப்பேசிகளை மீட்ட இணைய குற்றத்தடுப்பு பிரிவு போலீஸாா், அவற்றை வியாழக்கிழமை உரிமையாளா்களிடம் ஒப்படைத்தனா்.
நாமக்கல் காவல் நிலைய அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காவல் ஆய்வாளா் க.கபிலன், உதவி ஆய்வாளா்கள் பங்கேற்று கைப்பேசிகளை அதன் உரிமையாளா்களிடம் ஒப்படைத்தனா்.
என்கே-11-செல்போன்
மீட்கப்பட்ட கைபேசிகளை உரிமையாளா்களிடம் வழங்கிய நாமக்கல் நகர காவல் ஆய்வாளா் க.கபிலன்.