மீண்டுமா? பொங்கல் வெளியீட்டில் புஷ்பா - 2!
புஷ்பா - 2 திரைப்படம் மீண்டும் திரையரங்குகளில் வெளியிடப்படுவதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா - 2 திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதுடன் உலகளவில் ரூ.1,831 கோடியை வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
மேலும், 2024 ஆம் ஆண்டின் மிகப்பெரிய பிளாக்பஸ்டரான புஷ்பா 2 ராஜமௌலியின் பாகுபலி - 2 வசூலான ரூ. 1790 கோடியைக் கடந்து ஆச்சரியப்படுத்தியுள்ளது.
இதையும் படிக்க: கட்டுப்பாட்டை இழந்த அஜித்: நொறுங்கிய கார் - விடியோ!
இந்த நிலையில், இப்படத்தை ஜன. 11 ஆம் தேதி மீண்டும் திரையரங்களில் வெளியிட உள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
சங்கராந்தியை முன்னிட்டு ஆந்திரம் மற்றும் தெலுங்கானாவிலுள்ள சில திரைகளில் இப்படம் நீக்கப்பட்ட காட்சிகளுடன் திரையிடப்படலாம் எனத் தெரிகிறது.
நடிகர் ராம் சரணின் கேம் சேஞ்ஜர் திரைப்படம் ஜன. 10 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், புஷ்பா - 2 படத்தின் இந்த அறிவிப்பு ராம் சரண் ரசிகர்களிடம் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.