செய்திகள் :

மீண்டும் காளையின் ஆதிக்கத்தில் பங்குச் சந்தை!

post image

மும்பை: ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் தனியார் வங்கிகளின் பங்குகள் உயர்வுடன் வர்த்தகமான நிலையில், அந்நிய நிதிவரத்து அதிகரிப்பு காரணத்தால், இந்தியா-பாகிஸ்தான் எல்லை பதற்றங்களுக்கு மத்தியிலும் இரண்டு நாள் வீழ்ச்சியை சமன் செய்து, பெஞ்ச்மார்க் குறியீடுகள் இன்று(ஏப். 28) உயரந்து முடிந்தன.

வர்த்தக நேர தொடக்கத்தில் சென்செக்ஸ் 1,109.35 புள்ளிகள் உயர்ந்து 80,321.88 புள்ளிகளாக இருந்தது. வர்த்தக முடிவில் மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,005.84 புள்ளிகள் உயர்ந்து 80,218.37 புள்ளிகளிலும் தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 289.15 புள்ளிகள் உயர்ந்து 24,328.50 புள்ளிகளில் நிலைபெற்றது.

புவிசார் அரசியல் பதட்டங்களுக்கு மத்தியில் பாதுகாப்பு தொடர்பான பங்குகள் இன்று கணிசமாக உயர்ந்தது முடிந்தன. எச்ஏஎல் மற்றும் பெல் ஆகியவை முறையே 5 சதவிகிதம் மற்றும் 3 சதவிகிதம் வரை உயர்ந்தது முடிந்தன.

ஐடி பங்குகளை தவிர மற்ற அனைத்து குறியீடுகளும் உயர்ந்து முடிந்தன. உலோகம், ரியாலிட்டி, எண்ணெய் மற்றும் எரிவாயு, பார்மா, பொதுத்துறை வங்கி ஆகியவை 1 முதல் 3 சதவிகிதம் வரை உயர்ந்து முடிந்தன.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் அதன் 4-வது காலாண்டு வருவாய் 5 சதவிகிதம் உயர்ந்து சந்தையின் எதிர்பார்ப்புகளை முறியடித்தது. மஹிந்திரா அண்டு மஹிந்திரா, எஸ்எம்எல் இசுஸு நிறுவனத்தை ரூ.555 கோடிக்கு வாங்குவதாக அறிவித்ததையடுத்து, மஹிந்திரா அண்டு மஹிந்திரா 2.29 சதவிகிதம் உயர்ந்தது. மறுபுறம் எஸ்எம்எல் இசுசூ லிமிடெட் பங்குகள் 10 சதவிகிதம் சரிந்தன.

ஆர்பிஎல் வங்கியின் 4-வது காலாண்டு லாபம் சரிந்த நிலையிலும், அதன் பங்குகள் 10 சதவிகிதம் உயர்ந்தது. எல் & டி ஃபைனான்ஸ் 4-வது காலாண்டு லாபம் 15 சதவிகிதம் உயர்ந்த நிலையில், அதன் பங்குகள் கிட்டத்தட்ட 3 சதவிகிதம் சரிந்து முடிந்தன.

சென்செக்ஸில் சன் பார்மா, டாடா ஸ்டீல், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, ஆக்சிஸ் வங்கி, டாடா மோட்டார்ஸ், லார்சன் அண்டு டூப்ரோ, ஐசிஐசிஐ வங்கி உள்ளிட்ட பங்குகள் உயர்ந்தும், ஹெச்சிஎல் டெக், அல்ட்ராடெக் சிமெண்ட், நெஸ்லே, ஹிந்துஸ்தான் யூனிலீவர் ஆகிய பங்குகள் விலை சரிந்தும் முடிந்தன.

நிஃப்டியில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், எஸ்பிஐ லைஃப், பாரத் எலக்ட்ரானிக்ஸ், சன் பார்மா, ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல் உள்ளிட்ட பங்குகள் உயர்ந்தும், ஸ்ரீராம் ஃபைனான்ஸ், ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், எடர்னல், அல்ட்ராடெக் சிமெண்ட், ஹெச்.யு.எல். ஆகியன சரிந்தும் முடிந்தன.

அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் கடந்த வாரம் (வெள்ளிக்கிழமை) ரூ.2,952.33 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளனர்.

ஆசிய சந்தைகளில் தென் கொரியாவின் கோஸ்பி குறியீடு மற்றும் டோக்கியோவின் நிக்கேய் 225 ஆகியவை உயர்ந்து முடிந்த நிலையில், ஷாங்காய் எஸ்எஸ்இ காம்போசிட் மற்றும் ஹாங்காங்கின் ஹேங் செங் ஆகியவை சரிந்து முடிந்தன.

ஐரோப்பிய சந்தைகள் ஏற்றத்தில் வர்த்தகமான நிலையில், அமெரிக்க சந்தைகள் கடந்த வாரம் (வெள்ளிக்கிழமை) உயர்ந்து முடிந்தன.

உலகளாவிய பிரெண்ட் கச்சா எண்ணெய் 0.19 சதவிகிதம் குறைந்து பீப்பாய்க்கு 66.74 டாலராக உள்ளது.

இதையும் படிக்க: 6 நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.1.18 லட்சம் கோடியாக உயர்வு!

டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் 4-வது காலாண்டு நிகர லாபம் 69% உயர்வு!

புதுதில்லி: டி.வி.எஸ்., மோட்டார் நிறுவனத்தின் நிகர லாபம், 2025 மார்ச் மாதத்துடன் முடிவடைந்த 4-வது காலாண்டில், 69 சதவிகிதம் அதிகரித்து ரூ.698 கோடி ரூபாயாக உள்ளது.2023-24 ஜனவரி முதல் மார்ச் வரையிலான கால... மேலும் பார்க்க

மே 2-ல் அறிமுகமாகிறது ஏசஸ் நிறுவனத்தின் இரு புதிய லேப்டாப்!

ஏசஸ் நிறுவனம் இரண்டு புதிய மடிக்கணினிகளை (லேப்டாப்) மே 2ஆம் தேதி இந்திய சந்தையில் அறிமுகம் செய்யவுள்ளது. ஏசஸ் ஆர்ஓஜி ஸ்ட்ரிக் லேப்டாப் ஜி-16 (Asus ROG Strix G16), ஏசஸ் ஆர்ஓஜி ஸ்ட்ரிக் லேப்டாப் ஜி-18 ஆ... மேலும் பார்க்க

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 38 காசுகள் உயர்ந்து ரூ.85.03 ஆக முடிவு!

மும்பை: தொடர்ச்சியாக அந்நிய நிதி வரத்தும், கச்சா எண்ணெய் விலை குறைவு மற்றும் உள்நாட்டு பங்குகளில் ஏற்றமான போக்கு ஆகியவற்றால் இன்று அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் 38 காசுகள் உயர்ந்து ரூ.85.03 ... மேலும் பார்க்க

சந்தைப் போட்டியை சமாளிக்க வருகிறது ஒன்பிளஸ் 13எஸ்!

ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய மாடல் ’ஒன்பிளஸ் 13எஸ்’ விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு வரவுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. சீன ஸ்மார்ட்ஃபோன் தயாரிப்பு நிறுவனமான ஒன்பிளஸ் நிறுவனத்தின் மீது இந்திய இளைஞ... மேலும் பார்க்க

ஏப். 30-ல் அறிமுகமாகிறது மோட்டோரோலா எட்ஜ் 60 ப்ரோ!

மோட்டோரோலா எட்ஜ் 60 ப்ரோ ஸ்மார்ட்போன் ஏப்ரல் 30ஆம் தேதி இந்திய சந்தையில் அறிமுகமாகிறது. எட்ஜ் 60 வரிசையில் பட்ஜெட் விலையில் அறிமுகமாகும் ஸ்மார்ட்போனாக இது இருக்கும் என மோட்டோரோலா குறிப்பிட்டுள்ளது. கே... மேலும் பார்க்க

6 நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.1.18 லட்சம் கோடியாக உயர்வு!

புதுதில்லி: கடந்த வார வர்த்தகத்தில், டாப் 10 மதிப்புமிக்க ஆறு நிறுவனங்களின் ஒருங்கிணைந்த சந்தை மதிப்பீடானது ரூ.1,18,626.24 கோடியாக உயர்ந்ததுள்ளது குறிப்பிடத்தக்கது. இதில் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், அத... மேலும் பார்க்க