செய்திகள் :

மீண்டும் படப்பிடிப்பில் இணைந்த சிவராஜ்குமார்!

post image

புற்றுநோய் பாதிப்பிலிருந்து மீண்ட நடிகர் சிவராஜ்குமார் மீண்டும் படப்பிடிப்பில் இணைந்துள்ளார்.

கன்னட திரையுலகின் நட்சத்திர நடிகரான சிவராஜ்குமார் ஜெயிலர் படத்தின் மூலம் தமிழக ரசிகர்களிடமும் பெரிதாகப் பிரபலமானார்.பின், நேரடி தமிழ்ப் படமொன்றில் நாயகனாக நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இதற்கிடையே, அவர் நடித்த கோஸ்ட் படம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. அடுத்ததாக, மஃப்டி திரைப்படத்தின் முன்கதையாக உருவான ‘பைரதி ரணகல்’ படத்தில் நடிக்கச் சென்றார்.

இதையும் படிக்க: ரஷ்மிகாவுக்கு பாடம் புகட்ட வேண்டும்: கொந்தளித்த காங்கிரஸ் எம்எல்ஏ!

அப்படம் முடிந்ததும், தன் சிறுநீர் பையில் புற்றுநோய் பாதிப்பு கண்டறியப்பட்டதாகவும் அதற்காக சிகிச்சை எடுக்க அமெரிக்கா செல்ல உள்ளதையும் சிவராஜ்குமார் தெரிவித்தார்.

இது ரசிகர்களிடம் கவலையையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. பின், அங்கு சிகிச்சை முடிந்து நலமாக வீடு திரும்பினார்.

இந்த நிலையில், புற்றுநோய் பாதிப்பிலிருந்து மீண்டதைத் தொடர்ந்து தன் 131-வது படத்தின் படப்பிடிப்பில் சிவராஜ்குமார் இணைந்துள்ளார். பெங்களூருவில் துவங்கிய இப்படப்பிடிப்பில் அவருக்கு ரசிகர்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தனர்.

ரூ.31 லட்சத்துக்கு ஏலம்போன கார்ல்சன் அணிந்த சர்ச்சை ஜீன்ஸ்!

செஸ் உலக தரவரிசைப் பட்டியலில் முதலிடத்தில் உள்ள மேக்னஸ் கார்ல்சன் அணிந்து சர்ச்சையான ஜீன்ஸ் ரூ.31 லட்சத்துக்கு (36,100 டாலர்) ஏலம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த ஜீன்ஸுக்காக தொடர்ந்து 10 நாள்களாக நடைபெற்றுவ... மேலும் பார்க்க

படப்பிடிப்பில் ஸ்வாசிகாவுக்கு காயம்!

மாமன் படப்பிடிப்பில் நடிகை ஸ்வாசிகாவுக்கு காயம் ஏற்பட்டுள்ளது.நடிகர் சூரி விடுதலை, கருடன், கொட்டுக்காளி படங்களைத் தொடர்ந்து விலங்கு இணையத் தொடர் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்... மேலும் பார்க்க

தனுஷ் இயக்கத்தில் அஜித்?

நடிகர் அஜித்தை வைத்து படம் இயக்கும் முயற்சியில் நடிகர் தனுஷ் ஈடுபட்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.தமிழ் சினிமாவில் அரிதாகவே உச்ச நட்சத்திரங்களின் கூட்டணி இணைகிறது. பெரும்பாலும் ஒரே படத்தில் சம அளவ... மேலும் பார்க்க

குஷ்பு தொடரில் இணையும் பெண் நடனக் கலைஞர்!

நடிகை குஷ்பு நாயகியாக நடித்துவரும் புதிய தொடரில் நடனக் கலைஞர் பானுமதி நடிக்கவுள்ளார். இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் சின்ன மருமகள் தொடரில் குணச்சித்திர பாத்திரத்தில் நடித்து வருகிறார். ர... மேலும் பார்க்க