கொல்லிமலை மலைப் பாதைகளில் உயிா்காக்கும் உருளைத் தடுப்பான்கள்!
மீண்டும், மீண்டும்... அண்ணா பல்கலைக்கழகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!
சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்திற்கு குறுஞ்செய்தி மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக கனிணிமையத்திற்கு வியாழக்கிழமை மாலை இமெயில் மூலம் மர்ம நபர்கள் வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதுதொடர்பாக கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இதையடுத்து கோட்டூர்புரம் போலீசார் வெடிகுண்டு நிபுணர்களுடன் சோதனை செய்ததில் புரளி என தெரிய வந்ததை அடுத்து மிரட்டல் விடுத்த மர்ம நபர் குறித்து கோட்டூர்புரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், தற்போது மீண்டும் வெள்ளிக்கிழமை காலையும் குறுஞ்செய்தி மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.
காவல்துறையினர் முன்னெச்சரிக்கை காரணமாக நான்சி என்ற மோப்ப நாய்களுடன் மீண்டும் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
தற்போது, சென்னை பள்ளிகள், ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள், குறிப்பாக சில பல்கலைக்கழகங்களுக்கு வெடிகுண்டு வைத்திருப்பதாக மர்ம நபர்கள் இமெயில், காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் விடுத்து வருவதால் காவல்துறை தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.
12 ஆவது முறையாக வெடிகுண்டு தொடர்பாக மோப்ப நாய்கள் மூலமாக சோதனை செய்ததில் அவை புரளி என்பது தெரியவந்தது.
தொடர்ந்து மர்ம நபர்கள் இதுபோன்ற செயலில் ஈடுபட்டு வரும் நிலையில்,சில நாள்களுக்கு முன்பாக சென்னை சென்ரல் ரயில் நிலையத்து வெடிகுண்டு வைத்திருப்பதாக காவல் கட்டுப்பாட்டை அறை 100-க்கு தொடர்கொண்டு தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் காவல் கட்டுப்பாட்டை அறை தொடர்பு கொண்டு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் மனவளர்ச்சி குன்றிய சிறுவன் தனது தந்தையின் செல்போன் மூலம் பேசியது தெரிய வந்தது. வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் மனவளர்ச்சி குன்றிய சிறுவன் என்பதால் போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.