செய்திகள் :

மீனவர்கள் விவகாரம்: மத்திய அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

post image

இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விடுவிக்க உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து 3 மீன்பிடிப் படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற 10 மீனவர்களை 19.02.2025 அன்று இலங்கைக் கடற்படையினர் கைது செய்துள்ள நிலையில், கைது செய்யப்பட்டுள்ள அனைத்து மீனவர்களையும் அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விடுவித்திட உடனடியாக தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், இப்பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காண கூட்டு பணிக்குழுக் கூட்டத்தினைக் கூட்ட வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்தி முதல்வர் மு.க. ஸ்டாலின், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கருக்கு இன்று (20.02.2025) கடிதம் எழுதியுள்ளார்.

அக்கடிதத்தில், வெளியுறவுத் துறை அமைச்சரின் 9.2.2025 நாளிட்ட கடிதத்தில் குறிப்பிட்டுள்ள விரிவான பதிலுக்கு நன்றி தெரிவித்துள்ள முதல்வர், 19.2.2025 அன்று தமிழ்நாட்டைச் சேர்ந்த 10 மீனவர்கள், அவர்களது மீன்பிடிப் படகுகளுடன் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள சம்பவத்தினை அமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளார்.

இதையும் படிக்க | பிப். 25-ல் தமிழ்நாட்டுக்கு வரும் அமித் ஷாவுக்கு எதிராக காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்!

இலங்கைக் கடற்படையினரால் தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் கைது செய்யப்படும் சம்பவங்கள் கடந்த சில மாதங்களில் வேகமாக அதிகரித்துள்ளதைச் சுட்டிக்காட்டி, மீனவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் வாழ்வாதாரம் நீண்ட காலம் பாதிக்கப்படுவதால், இத்தகைய கைது நடவடிக்கைகளைத் தடுத்திட உடனடி மற்றும் தொடர்ச்சியான தூதரக நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று தனது கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.

எனவே, மீனவர்கள் கைது செய்யப்படுவதைத் தடுக்கவும், கைது செய்யப்பட்ட அனைத்து மீனவர்களையும் அவர்களது மீன்பிடிப் படகுகளையும் இலங்கை அதிகாரிகளிடமிருந்து விடுவிக்க ஏதுவாக, உரிய தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், இந்த நீடித்த பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண தான் ஏற்கனவே வலியுறுத்தியபடி கூட்டுப் பணிக்குழுக் கூட்டத்தினைக் கூட்டுவதற்கும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு முதல்வர் தனது கடிதத்தில் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளார்.

தவெக ஆண்டு விழாவில் 2,000 பேருக்கு மட்டுமே அனுமதி?

சென்னையில் நடைபெறும் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் ஆண்டு விழாவில் 2,000 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சென்னை ஈசிஆர் சாலையில் மாமல்லபுரம் அருகே பூஞ்சேரி கிராமத்த... மேலும் பார்க்க

தடைசெய்யப்பட்ட இயக்கத்தைச் சேர்ந்த 6 பேர் உள்பட 8 பேர் கைது!

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் தடைசெய்யப்பட்ட இயக்கத்தைச் சேர்ந்த 6 பேர் உள்பட மொத்தம் 8 பேர் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.மேற்கு இம்பால் மாவட்டத்தில் தடைசெய்யப்பட்ட இயக்கமான காங்லெ... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் குறைந்தது மீன்கள் விலை!

தூத்துக்குடி: தூத்துக்குடியில் வரத்து அதிகரித்ததால் மீன்கள் விலை சனிக்கிழமை குறைந்து காணப்பட்டது.தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டுப் படகு மீன்பிடி துறைமுகத்திலிருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்ற ஏராளம... மேலும் பார்க்க

நாகை - இலங்கை இடையே கப்பல் போக்குவரத்து மீண்டும் துவக்கம்!

நாகையில் இருந்து இலங்கை காங்கேசன்துறைக்கு கப்பல் போக்குவரத்து சேவை மீண்டும் துவங்கியது. பயணச்சீட்டு விலைக் குறைப்பு, கப்பலில் காலை, மதிய உணவு இலவசம் என பயணிகளை ஈர்க்க கப்பல் நிறுவனம் சலுகைகளை அறிவித்த... மேலும் பார்க்க

சென்னை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்!

விம்கோ நகர் ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் காரணமாக சென்னை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலில், 'விம்கோ நகர் ரயில் நிலையத்தில... மேலும் பார்க்க

வழியெங்கும் திரண்டு வாரியணைத்துக் கொண்ட கடலூர்!

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் ஒவ்வொரு மாவட்டமாக சென்று அரசின் திட்ட செயல்பாடுகள் குறித்து கள ஆய்வு செய்து வருகிறாா். அந்த வகையில், 2 நாள் பயணமாக கடலூருக்கு வெள்ளிக்கிழமை (பிப்.21) வருகை தந்த முதல்வருக்... மேலும் பார்க்க