முக்கியத் தொடர்களின் ஒளிபரப்பு நேரம் மாற்றம்!
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் புதிய தொடர் வருகையால், முக்கியத் தொடர்களின் நேரத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
புதிய தொடர்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் பிரைம் டைம் எனப்படும் முக்கியமான நேரத்தில் புதிய தொடரையும், ஏற்கெனவே மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற தொடரை மாற்று நேரத்திலும் ஒளிபரப்ப தொலைக்காட்சிகள் திட்டமிடுகின்றன.
அந்தவகையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியிலும் புதிய தொடரால், பிற்பகலில் ஒளிபரப்பாகிவந்த சில தொடர்களின் நேரம் மாற்றப்பட்டுள்ளது. இந்த நேர மாற்றம் இன்று முதல் (மார்ச் 17) அமல்படுத்தப்பட்டுள்ளது.

ஜீ தமிழில் சமீபத்தில் வெளியான வெண்பா - பரமேஸ்வரி - தீபக் - ஜெய் பாலா உள்ளிட்டோர் முதன்மை பாத்திரத்தில் நடிக்கும் மனசெல்லாம் தொடரும், சாயா சிங் - செளந்தர்யா ரெட்டி நாயகிகளாக நடிக்கும் கெட்டிமேளம் ஆகிய தொடர்கள் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இதனிடையே வரும் திங்கள் (மார்ச் 17) முதல் ராமன் தேடிய சீதை என்ற புதிய தொடர் ஒளிபரப்பாக உள்ளது. கன்னடத்தில் வெற்றி பெற்ற சீதா ராமன் என்ற தொடர், தமிழில் மொழிமாற்றம் (டப்பிங்) செய்து ஒளிபரப்பாகிறது.
இத்தொடர் திங்கள் முதல் சனி வரை மதியம் 2:30 மணிக்கு ஒளிப்பரப்பாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, இதுவரை மதியம் 2:30 மணிக்கு ஒளிபரப்பாக வந்த மனசெல்லாம் தொடர் இனி 3 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது.
அதேபோல், நானே வருவேன் தொடர் இனி 3:30 மணிக்கு ஒளிபரப்பாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | இதயம் தொடரிலிருந்து விலகும் ஜனனி! காரணம் பகிர்ந்து உருக்கம்!
இதையும் படிக்க | நீண்ட நாள்களுக்குப் பிறகு மீண்டும் டப்பிங் சீரியல்!