தஞ்சாவூர் அருகே குளத்தில் மூழ்கி உயிரிழந்த 3 சிறுவர்களின் குடும்பங்களுக்கு அரசு ...
முடி வெட்டச் சொன்ன ஆசிரியர்; கத்தியால் குத்திக் கொன்ற 12-ம் வகுப்பு மாணவர்கள்! - என்ன நடந்தது?
ஹரியானா மாநிலம் ஹிசாரில் உள்ள பாஸ் பாட்ஷாபூர் கிராமத்தில் கர்தார் நினைவு சீனியர் செகண்டரி பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியின் முதல்வராக ஜக்பீர் சிங் (50) பணியாற்றி வந்தார். நேற்று காலை பள்ளியில் ஆசிரியர்கள் மற்றும் வழிகாட்டிகளுக்கு மரியாதை செலுத்தும் விதமாக குரு பூர்ணிமா கொண்டாடப்பட்டது. அப்போது காலை 10.30 மணியளவில் முதல்வர் ஜக்பீர் சிங் 12-ம் வகுப்பு படிக்கும் இரண்டு மாணவர்களால் கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார்.

இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறை அளித்த தகவலின் படி, ``முதல்வர், பள்ளியில் படிக்கும் மாணவர்களிடம் ஒழுக்கம் தொடர்பான விஷயங்களில் கண்டிப்புடன் இருப்பார் எனத் தெரிகிறது. முதல்வரைக் கத்தியால் குத்திக் கொலை செய்த இரண்டு மாணவர்களையும் தலைமுடி வெட்டவும், சரியாக உடை அணியவும், பள்ளியின் விதிமுறைகளை முழுமையாகப் பின்பற்றவும் கேட்டுக் கொண்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இரண்டு மாணவர்களும் மைனர்கள்.
அவரை கத்தியால் பலமுறை குத்தியதாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். மாணவர்கள் இன்னும் கைது செய்யப்படவில்லை. பள்ளியில் இருந்த சிசிடிவி காட்சிகளில், மாணவர்கள் முதல்வரை கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடுவது பதிவாக்கியிருக்கிறது. விரிவான விசாரணைக்குப் பிறகுதான் கொலைக்கான சரியான சூழ்நிலைகள், காரணங்கள் தெரியவரும்" என்றனர்.