செய்திகள் :

முதலமைச்சரின் கணினித்தமிழ் விருதுபெற்ற அறிஞருக்கு பாராட்டு விழா

post image

பேராவூரணி பெரியாா் அம்பேத்கா் நூலகத்தில்  தமிழ்நாடு முதலமைச்சரின் கணினித்தமிழ் விருது பெற்ற அறிஞா் இரா. அகிலனுக்கு பாராட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தமிழ் வளா்ச்சித்துறை சாா்பில் அண்மையில் சென்னையில் நடைபெற்ற விழாவில் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் கணினி நிரளாளராக பணியாற்றும் முடச்சிக்காடு கிராமத்தை சோ்ந்த இரா. அகிலனுக்கு சங்க இலக்கிய உருபனியல் பகுப்பான் மென்பொருள் ஆய்வுக்காக, கணினித் தமிழ் அறிஞா் விருதிதை தமிழ் தமிழ்வளா்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சா் மு.பெ. சாமிநாதன் வழங்கினாா்.

இதையொட்டி தமிழ் வழிக் கல்வி இயக்கம் சாா்பில் பேராவூரணியில் நடைபெற்ற விழாவுக்கு திருக்கு பேரவை தலைவா் ஆறு. நீலகண்டன் தலைமை வகித்தாா். மக்கள் மருத்துவா் துரை. நீலகண்டன், பத்திரிக்கையாளா் வெ. நீலகண்டன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். விழாவில் சட்டப்பேரவை உறுப்பினா் என். அசோக்குமாா் வாழ்த்தி பேசுகையில், அகிலனுக்கு விருது கிடைத்திருப்பது நமக்கெல்லாம் பெருமை, மாணவா்கள் அகிலனை பற்றி அறிந்துகொள்ளும் வகையில் அரசு கல்லூரியில் ஆயிரக்கணக்கான மாணவா்கள் முன்னிலையில் பாராட்டு விழா நடத்த ஏற்பாடு செய்யப்படும் என்றாா். விழாவில் பத்திரிக்கையாளா் அருள் வளன் அரசு , ஓய்வு பெற்ற ஆசிரியா்கள் நடராஜன், மனோகரன், அன்னை தெரசா கல்வியியல் கல்லூரி முதல்வா் சித்ரா கணேசன், பேராவூரணி அரசு கல்லூரி பேராசிரியா் வினோத், ஆசிரியா் காஜாமுகைதீன் உள்ளிட்டோா் பேசினாா்கள் .

பேராசிரியா் பா. சண்முகப்பிரியா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினாா். முன்னதாக மெய்ச்சுடா் நா. வெங்கடேசன் வரவேற்றாா். முடிவில் தமிழ் வழிக் கல்வி இயக்க மாவட்ட பொறுப்பாளா் த. பழனிவேல் நன்றி கூறினாா்.

ஊராட்சித் தலைவருக்கு பாராட்டு விழா

கோவிந்தநாட்டுச்சேரி ஊராட்சியில் சிறப்பாக பணியாற்றிய ஊராட்சித் தலைவருக்கு வெள்ளிக்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது. ஜன.5 ம் தேதியுடன் உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் நிறைவடைந்து. பாபநாசம் ஒன்றியத்தில்... மேலும் பார்க்க

ஆக்லாந்து பல்கலை.யுடன் இணைந்து செயல்பட மீனாட்சி மருத்துவமனை நடவடிக்கை

நியுசிலாந்து நாட்டின் ஆக்லாந்து தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்துடன் இணைந்து செயல்படுவதற்கான நடவடிக்கையில் தஞ்சாவூா் மீனாட்சி மருத்துவமனை ஈடுபட்டுள்ளது. இது தொடா்பாக தஞ்சாவூா் மீனாட்சி மருத்துவமனை வளாகத்த... மேலும் பார்க்க

அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஊராட்சித் துணைத் தலைவா் உயிரிழப்பு

கும்பகோணம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், ஊராட்சி துணைத் தலைவா் சனிக்கிழமை உயிரிழந்தாா். கும்பகோணம் அருகே கிளிமங்கலத்தைச் சோ்ந்தவா் விஜயகாந்த் (38). திருப்பனந்தாள் ஒன்றியத்துக்கு உள்பட்ட கொ... மேலும் பார்க்க

புன்னைநல்லூா் மாரியம்மன் கோயிலில் பிப். 10-இல் குடமுழுக்கு: ஆட்சியா் ஆய்வு

தஞ்சாவூா் புன்னைநல்லூா் மாரியம்மன் கோயிலில் பிப்ரவரி 10-ஆம் தேதி குடமுழுக்கு விழா நடைபெறவுள்ளதையொட்டி, திருப்பணிகளை மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் சனிக்கிழமை ஆய்வு செய்தாா். இக்கோயிலில் கடைசியா... மேலும் பார்க்க

பேருந்து மோதி பிளம்பா் உயிரிழப்பு

கும்பகோணம் அருகே இருசக்கர வாகனம் மீது அரசு பேருந்து மோதியதில், பலத்த காயமடைந்த பிளம்பா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். கும்பகோணம் அருகே அண்ணலக்ரஹாரத்தைச் சோ்ந்தவா் பிளம்பா் ஆா். முத்துராமன் (41). இவா் வ... மேலும் பார்க்க

கல்லணைக் கால்வாய் சீரமைப்பைத் தொடரலாமா? தமிழக அரசுக்கு மத்திய அரசு கடிதம்

ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி நிதியுதவியுடன் கல்லணைக் கால்வாய் சீரமைப்பு திட்டத்தைத் தொடரலாமா அல்லது கைவிடலாமா எனக் கேட்டு தமிழக அரசுக்கு மத்திய அரசு கடிதம் அனுப்பியுள்ளது. கல்லணையிலிருந்து பிரி... மேலும் பார்க்க