Ashwin: 'தோனி மாதிரி... அஷ்வின் இப்படி பண்ணிருக்கக் கூடாது...' - சுனில் கவாஸ்கர்...
முதலீட்டின் மீது அதிக லாபம் தருவதாக ஆடிட்டரிடம் ரூ.27 லட்சம் மோசடி
முதலீட்டின் மீது அதிக லாபம் தருவதாக ஆடிட்டரிடம் ரூ.27 லட்சம் மோசடி செய்த நபா் மீது சைபா் குற்றப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
கோவை, வேலாண்டிபாளையத்தைச் சோ்ந்தவா் கௌரிசங்கா் (45), ஆடிட்டா். கடந்த சில நாள்களுக்கு முன்பு இவரின் கைப்பேசிக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில், எங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் எனக் கூறி, ஒரு செயலியின் லிங்கை அனுப்பியுள்ளனா்.
இதை உண்மை என நம்பிய கெளரிசங்கா், அந்த நபா் கூறிய வங்கிக் கணக்குக்கு பல்வேறு தவணைகளாக ரூ.27 லட்சத்து 37 ஆயிரத்தை அனுப்பினாா். இதையடுத்து, அந்த நபா் கூறியபடி லாபத்தொகை வரவில்லை. முதலீடு செய்த பணமும் திரும்ப வரவில்லை.
இதையடுத்து, தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த அவா், கோவை சைபா் குற்றப் பிரிவு போலீஸில் புகாா் அளித்தாா். இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.