செய்திகள் :

முதலும் முடிவும் சிஎஸ்கே... IPL-ல் இருந்து ஓய்வை அறிவித்த அஸ்வின்! - ஆனால் ஒரு ட்விஸ்ட்?

post image

இந்திய கிரிக்கெட் அணியின் தலைசிறந்த சுழற்பந்துவீச்சாளர்களில் ஒருவரான தமிழ்நாட்டைச் சேர்ந்த ரவிச்சந்திரன் அஷ்வின், கடந்த ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலியாவில் பார்டர் கவாஸ்கர் தொடர் நடைபெற்றுக் கொண்டிருந்த சமயத்தில் தொடரின் பாதிலேயே சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தார்.

அந்த ஓய்வு அறிவிப்புக்கு 3 வாரங்களுக்கு முன்புதான், ஐ.பி.எல் மெகா ஏலத்தில் அஸ்வினை ரூ. 9.75 கோடிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி வாங்கியது.

அஸ்வின்
அஸ்வின்

இருப்பினும், 2008 முதல் 2015 வரை சென்னை அணியில் முக்கிய வீரராக ஆடிய அஸ்வினால், அத்தகைய தாக்கத்தை கடந்த சீசனில் ஏற்படுத்த முடியவில்லை.

9 போட்டிகளில் வெறும் 7 விக்கெட்டுகள் மட்டும்தான் வீழ்த்தியிருந்தார்.

சென்னையும் அணியும் மோசமாக ஆடி பிளேஆஃப் கூட செல்ல முடியவில்லை என்றாலும், ஆயுஷ் மாத்ரே, டெவால்ட் பிரேவிஸ், உர்வில் படேல் போன்ற இளம் வீரர்களின் ஆட்டத்திறன் சீசன் இறுதியில் வெளிப்பட்டது.

அதனால், அடுத்த சீசனில் அணியை மறுசீரமைக்கவேண்டிய சூழல் உருவாகியிருக்கிறது.

மேலும், சுழற்பந்துவீச்சில் நூர் அஹமது சிறப்பாகச் செயல்பட்டதால் அடுத்த சீசனில் அணியில் அஸ்வின் இருப்பாரா என்ற பேச்சுக்கள் எழுந்தது.

சமீபத்தில், டெவால்ட் பிரேவிஸை அதிக தொகை கொடுத்து சி.எஸ்.கே வாங்கியது என்ற பொருள்படும் வகையில் அஸ்வின் பேசியது, அப்படி விதிமுறைகள் மீறப்படவில்லை என அணி நிர்வாகத்தை அறிக்கை வெளியிட வைத்தது.

இவ்வாறான சூழலில், ஐ.பி.எல் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அஸ்வின் இன்று அறிவித்திருக்கிறார்.

இது குறித்து தனது எக்ஸ் தளப் பக்கத்தில் அஸ்வின், "சிறப்பான நாளில் சிறப்பான தொடக்கம்.

ஒவ்வொரு முடிவும் ஒரு புதிய தொடக்கத்தைக் கொண்டிருக்கும் என்பார்கள். இன்று ஒரு ஐ.பி.எல் வீரராக எனது நேரம் முடிவடைகிறது.

ஆனால், பல்வேறு லீக் (வெளிநாட்டு லீக் தொடர்கள்) போட்டிகளுக்கான எனது நேரம் இன்றே தொடங்குகிறது.

பல ஆண்டுகால உறவுகளுக்காகவும், அற்புதமான நினைவுகளுக்காகவும் அனைத்து அணிகளுக்கும் நன்றி.

முக்கியமாக ஐ.பி.எல் மற்றும் பி.சி.சி.ஐ இதுவரை எனக்கு வழங்கிய அனைத்திற்கும் நன்றி" என்று பதிவிட்டிருக்கிறார்.

ஐ.பி.எல்லில் நீங்கள் ரசித்த அஸ்வினின் சிறப்பான ஆட்டம் எதுவென்று கமெண்ட்டில் பதிவிடுங்கள்!

தோனி டு கோலி... ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவால் சுமார் ரூ.200 கோடி வரை இழக்கும் இந்திய வீரர்கள்!

தற்போது நடந்து முடிந்த மழைக்கால நாடளுமன்ற கூட்டத் தொடரில், ஆன்லைன் கேமிங் ஊக்குவித்தல் மற்றும் ஒழுங்குமுறை மசோதா 2025-ஐ (Promotion and Regulation of Online Gaming Bill, 2025) எனும் ஆன்லைன் சூதாட்ட தடை... மேலும் பார்க்க

2011 CWC Final: "யுவி-க்கு முன்னாடி தோனி இறங்கியதற்கு 2 காரணங்கள் இருக்கிறது" - சச்சின் ஓபன் டாக்

இந்திய கிரிக்கெட் வரலாற்றில் 2011-ம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பைக்கு தனி இடம் உண்டு.ஏனெனில், 1983-ல் இந்திய அணி கபில்தேவ் தலைமையில் உலகக் கோப்பை வென்ற பிறகு 6 உலகக் கோப்பைத் தொடர்களில் ஒருமுறைக்கூட கோப... மேலும் பார்க்க

Pujara: ஓய்வு பெற்றாலும் Unbeatable... `மாடர்ன் டே டிராவிட்' புஜாராவின் டாப் 3 சாதனைகள்!

கிரிக்கெட் உலகில் ஆக்ரோஷ அணுகுமுறைக்கு சொந்தக்காரர்களான ஆஸ்திரேலிய வீரர்கள், கடந்த பார்டர் கவாஸ்கர் தொடரில் இந்திய அணியில் ஒருவர் இல்லாததைக் கண்டு நிம்மதி பெருமூச்சு விட்டனர் என்றால், அத்தகைய சிறப்புக... மேலும் பார்க்க

"தோனிக்கு என்னைப் பிடிக்காது" - சர்வதேச கரியர் தோல்வி குறித்து மனம் திறக்கும் மனோஜ் திவாரி

மேற்கு வங்கத்திலிருந்து வந்த இந்தியாவின் சிறந்த உள்ளூர் போட்டி வீரர்களில் ஒருவர் மனோஜ் திவாரி.உள்ளூர் போட்டிகளைப் பொறுத்தமட்டில் முதல் தர கிரிக்கெட்டில் 47.8 ஆவரேஜில் 10,000-க்கும் மேற்பட்ட ரன்களும், ... மேலும் பார்க்க

IND vs PAK: "இந்தியாவும் பாகிஸ்தானும் டெஸ்ட் தொடரில் ஆட வேண்டும்" - வாசிம் அக்ரம் விருப்பம்

இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இருநாடுகளுக்கும் இடையிலான அரசியல் காரணமாக இரு அணிகளும் கடந்த 13 ஆண்டுகளாக இருதரப்பு கிரிக்கெட் தொடரில் ஆடாமல் இருக்கின்றன.டெஸ்ட் தொடரைப் பொறுத்தவரையில் கடைசியாக 2007-ல் 3 போட்... மேலும் பார்க்க

BCCI: 'உறவை முறித்துக்கொள்கிறோம்'; டிரீம் 11- பிசிசிஐ ஒப்பந்தம் ரத்து; காரணம் என்ன?

டிரீம் 11 (Dream 11) நிறுவனத்தின் ஒப்பந்தத்தை பிசிசிஐ ரத்து செத்திருப்பதாக பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைக்கியா தெரிவித்திருக்கிறார்.டிரீம் 11 நிறுவனம் கடந்த 2023 ஆம் ஆண்டு 358 கோடி ரூபாய்க்கு இந்திய கிர... மேலும் பார்க்க