முதல்நாளில் ரூ.150 கோடிக்கும் அதிகம் வசூலித்த ஓஜி!
நடிகர் பவன் கல்யாணின் ’தே கால் ஹிம் ஓஜி’ திரைப்படம் முதல்நாளில் ரூ.150 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டுள்ளது.
இயக்குநர் சுஜித் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படம் நேற்று (செப்.25) பிரம்மாண்டமாக வெளியாகியது.
ஆந்திர துணை முதல்வரானதற்குப் பிறகு பவன் கல்யாண் நடிப்பில் ஹரி ஹர வீரமல்லு திரைப்படம் வெளியானது. இதனைத் தொடர்ந்து ’தே கால் ஹிம் ஓஜி’ படத்தில் நடித்திருந்தார்.
சாகோ, ரன் ராஜா ரன் ஆகியப் படங்களை இயக்கிய சுஜித் இயக்கியுள்ளதால் படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகரித்திருந்தது.
ஓஜிக்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்து வந்தாலும் அதன் மேக்கிங் ரீதியாகவும் ஆக்சன் காட்சிகளினாலும் இப்படம் தெலுங்கில் பெரிய வரவேற்பைப் பெற்று வருகிறது.
இந்நிலையில், இந்தப் படம் முதல் நாளிலேயே ரூ.154 கோடி வசூலித்துள்ளது.
Idhi Pawan Kalyan Cinema…..#OG Erases History
— DVV Entertainment (@DVVMovies) September 26, 2025
Worldwide Day 1 Gross - 154 Cr+ #BoxOfficeDestructorOG#TheyCallHimOGpic.twitter.com/Olf8owSSSZ
The film team has released a poster stating that actor Pawan Kalyan's film 'They Call Him OG' has collected more than Rs.150 crore on the first day.