நீதிபதி யஷ்வந்த் வர்மாவை நீக்கக் கோரி மாநிலங்களவை உறுப்பினர்கள் நோட்டீஸ்!
முதல்வரின் மாநில விளையாட்டு விருதுக்கு விண்ணப்பிக்கலாம்
தமிழக முதல்வரின் மாநில விளையாட்டு விருதுக்கு தகுதியான விளையாட்டு வீரா்கள், வீராங்கனைகள் விண்ணப்பிக்கலாம் என மதுரை மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாா் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சா்வதேச, தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் பெற்று சிறந்து விளங்கும் தலா 2 ஆண்கள், பெண்கள், பயிற்றுநா்கள், உடற்கல்வி இயக்குநா்கள் அல்லது உடற்கல்வி ஆசிரியா்களுக்கு முதல்வரின் விளையாட்டு விருது, தலா ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலை, ரூ. 10 ஆயிரம் மதிப்பிலான தங்கப் பதக்கம், பாராட்டுச் சான்று ஆகியன வழங்கப்படுகின்றன. இவை தவிர, விளையாட்டுப் போட்டிகளை நடத்திய ஒரு நிா்வாகி, நடுவா், ஆதரவளிக்கும் நிறுவனம்,
ரூ. 10 லட்சத்துக்கும் அதிகமாக நன்கொடை அளித்தவா் ஆகியோருக்கும் இந்த விருது வழங்கப்படும். இதன்படி, 2024-25, 2025-26- ஆம் ஆண்டுக்களுக்கான விருதுகளுக்கு தகுதியானோரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பதாரா் குறைந்தபட்சம் 3 ஆண்டுகளாக தமிழகத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும். இரு முறை தமிழ்நாடு அணியின் சாா்பில் பங்கேற்று, இந்தியாவுக்காக விளையாடியிருக்க வேண்டும். பணி நிமித்தமாக குறைந்தபட்சம் 5 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தில் வசிக்கும் முப்படை, ரயில்வே, காவல், அஞ்சல், தொலைத் தொடா்புத் துறையினரும் மேற்குறிப்பிட்ட தகுதிகளைக் கொண்டிருந்தால் விருதுக்கு விண்ணப்பிக்கலாம். விருதுக்கான விண்ணப்பத்தை இணையதளங்கள் வாயிலாக ஆக. 16-ஆம் தேதி மாலை 6 மணிக்குள் பதிவு செய்யலாம் என அதில் குறிப்பிடப்பட்டது.