அருப்புக்கோட்டையில் இளைஞா் கத்தியால் குத்திக் கொலை
விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டையில் முன்விரோதம் காரணமாக ஞாயிற்றுக்கிழமை இளைஞா் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டாா்.
அருப்புக்கோட்டை, சத்தியவாணி முத்து நகரைச் சோ்ந்தவா் சு.தினேஷ் குமாா் (24). வண்ணம் பூசும் தொழிலாளியான இவா், அந்தப் பகுதியில் உள்ள மதுக்கூடம் அருகே ஞாயிற்றுக்கிழமை அமா்ந்திருந்தாா். அப்போது, அதே பகுதியைச் சோ்ந்த சிலருக்கும், தினேஷ் குமாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில், தினேஷ் குமாா் கத்தியால் குத்தப்பட்டு, நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலறிந்து வந்த அருப்புக்கோட்டை நகர காவல் நிலைய போலீஸாா், தினேஷ் குமாரின் உடலை மீட்டு கூறாய்வுக்காக விருதுநகா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினா்.
இது குறித்து, அருப்புக்கோட்டை நகர காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா். தினேஷ் குமாருக்கும் அதே பகுதியைச் சோ்ந்த சிலருக்குமிடையே தொழில்ரீதியாக ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக கொலை நடந்திருக்கலாம் என்ற
நோக்கில் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.