செய்திகள் :

அதிமுக: "காலில் விழுகிறோம்; சேர்த்துக்கொள்ளுங்கள்" - இபிஎஸ்ஸிடம் ஓபிஎஸ் ஆதரவாளர் கோரிக்கை

post image

அதிமுக-வில் இணைய ஓ.பன்னீர்செல்வம் மேற்கொண்ட அத்தனை முயற்சிகளும் பலனில்லாமல் போய்விட்டன.

ஓ.பி.எஸ் ஆதரவாளர் பேசியது என்ன?

இந்த நிலையில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு ஓ.பி.எஸ் ஆதரவாளரான ரஞ்சித்குமார் நேரடியாகக் கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார்.

ஓ.பி.எஸ் ஆதரவாளர் ரஞ்சித்குமார்
ஓ.பி.எஸ் ஆதரவாளர் ரஞ்சித்குமார்

காஞ்சிபுரத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ரஞ்சித்குமார், "நாங்கள் எல்லாம் போராடியாச்சு. தமிழ்நாடு முழுவதும் போராடிப் பார்த்தாச்சு. எல்லோரையும் சந்திச்சாச்சு.

இப்போது உங்கள் காலிலேயே வந்து விழுகிறோம். சேர்த்துக்கொள்ளுங்கள்.

எங்களைச் சேர்த்துக்கொள்ளவில்லை என்றால், 2026-ம் ஆண்டு, மூன்று எழுத்து உள்ள கட்சிதான் ஆட்சி அமைக்கும்" என்று பேசியுள்ளார்.

என்ன பதில் வரலாம்?

இந்தக் கோரிக்கைக்கு எடப்பாடி பழனிசாமி பக்கத்தில் இருந்து என்ன பதில் வரும் என்று தற்போது ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னரே, எடப்பாடி பழனிசாமி, 'ஓ.பி.எஸ் தவிர யார் அதிமுகவிற்கு வந்தாலும், சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்' என்று கூறியிருந்தார்.

எல்லா ரூட்டிலும் முயற்சி செய்த பிறகு, எதுவும் கைகொடுக்காததால், நேரடியாக தற்போது எடப்பாடி பழனிசாமியிடமே சென்றுள்ளனர் ஓ.பி.எஸ் அணி.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

Monsoon session: `ஆபரேஷன் சிந்தூர்; பொருளாதாரம்; நக்சலிசம்' - செய்தியாளர்களிடம் மோடி கூறியதென்ன?

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று (ஜூலை 21) முதல் தொடங்குகிறது.இந்தக் கூட்டத்தொடரில், 17 மசோதாக்களை மத்திய அரசு தரப்பிலிருந்து தாக்கல் செய்யவிருப்பதாக மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் ... மேலும் பார்க்க

Trump: `ஒபாமா கைது செய்யப்படுவது போன்ற AI வீடியோ' - ட்ரம்ப் சொல்ல வருவது என்ன?

முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவை கைது செய்வது போன்ற AI வீடியோவைப் பகிர்ந்துள்ளார் டொனால்ட் ட்ரம்ப். அந்த வீடியோ பராக் ஒபாமா, "அதிபர் சட்டத்துக்கு மேலானவர்" எனக் கூறுவதைப் போலவும், அதற்கு அமெரிக்... மேலும் பார்க்க

அண்ணா அறிவாலயத்தில் அன்வர் ராஜா... கட்சியில் இருந்து நீக்கிய அதிமுக! - தகிக்கும் அரசியல் களம்

அதிமுகவின் முன்னாள் அமைச்சர் மற்றும் எம்.பி அன்வர் ராஜா. எம்.ஜி.ஆர் அதிமுகவை தொடங்கிய காலத்தில் இருந்தே, அந்தக் கட்சியில் இருக்கும் சீனியர் இவர்.அன்வர் ராஜாவும், பாஜக உடனான கூட்டணியும்! அடுத்த ஆண்டு த... மேலும் பார்க்க

Shashi Tharoor: `அவர் கங்கிரஸாரில் ஒருவரா?’ - சசி தரூர் விசுவாசத்தை கேள்வி கேட்ட மூத்த தலைவர்

கேரள காங்கிரஸ் மூத்த தலைவர் கே. முரளிதரன், காங்கிரஸ் எம்.பி சசி தரூரை மீண்டும் தாக்கி பேசியிருக்கிறார். தேசிய பாதுகாப்பு விவகாரங்களில் சசி தரூர் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளும் வரை அவர் காங்கிரஸில்... மேலும் பார்க்க

சட்டமன்றத்தில் ஆன்லைன் ரம்மி விளையாடிய மகா. அமைச்சர்? பதவி விலக வலியுறுத்தும் எதிர்க்கட்சிகள்

மகாராஷ்டிரா தேசியவாத காங்கிரஸ் (சரத்பவார்) சட்டமன்ற உறுப்பினர் ரோஹித் பவார் இரண்டு வீடியோக்களை சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.அதில் மாநில வேளாண்துறை அமைச்சர் மாணிக்ராவ் கோகடே சட்டமன்ற கூட்... மேலும் பார்க்க