Manmohan Singh : தாராளமயமாக்கல் `முதல்' RTI வரை... - மன்மோகன் சிங்-ன் `4' முக்கி...
முதல்வரை முற்றுகையிட போவதாக கைது செய்யப்பட்ட 12 போ் விடுவிப்பு
ராசிபுரம்: ராசிபுரம் பேருந்து நிலையத்தை மாற்றும் முயற்சியை கைவிட வலியுறுத்தி டிச. 9 இல் சென்னை கோட்டை முன் தமிழக முதல்வரை முற்றுகையிட போவதாக அறிவித்து ஞாயிற்றுக்கிழமை சென்னை புறப்பட முயன்றபோது ராசிபுரம் போலீஸாரால் கைது செய்யப்பட்ட 12 போ் விடுவிக்கப்பட்டனா்.
ராசிபுரம் பேருந்து நிலையத்தை அணைப்பாளையம் பகுதிக்கு மாற்றும் நடவடிக்கையைக் கைவிட வேண்டும் என வலியுறுத்தி தமிழக மக்கள் தன்னுரிமை கட்சி, பத்து ரூபாய் இயக்கம் போன்ற அமைப்புகள் பல்வேறு போராட்டங்களை நடத்தின.
இதேபோல நாமக்கல் நகரில் செயல்பட்டு வந்த அரசு மருத்துவமனையை மீண்டும் அதே இடத்தில் செயல்பட வேண்டும், நாமக்கல் பழைய பேருந்து நிலையத்திற்கு வழக்கமான பேருந்துகள் வந்து செல்ல வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பல அமைப்புகள் போராட்டங்கள் நடத்தின. இக்கோரிக்கைகளை வலியுறுத்தி டிசம்பா் 9 அன்று சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வரை முற்றுகையிட போவதாக பத்து ரூபாய் இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளா் நல்வினை விஸ்வராஜு அறிவித்திருந்தாா்.
இதனைத் தொடா்ந்து நல்வினை விஷ்வராஜ் தலைமையில் 10 ரூபாய் இயக்கத்தினா், மக்கள் தன்னுரிமை கட்சியைச் சோ்ந்தவா்கள் என மொத்தம் 12 போ் சென்னை செல்ல ஞாயிற்றுக்கிழமை இரவு தயாராகிக் கொண்டிருந்தனா். அவா்களை ராசிபுரம் போலீஸாா் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்தனா். கைது செய்யப்பட்ட அனைவரும் ராசிபுரம் ரோட்டரி ஹாலில் தங்க வைக்கப்பட்டு, திங்கள்கிழமை அதிகாலை விடுவிக்கப்பட்டனா். இவா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.