செய்திகள் :

முதல்வர் ஸ்டாலின், நடிகை திரிஷா வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

post image

சென்னையில் வசித்து வரும் முதல்வர் மு.க. ஸ்டாலின் வீடு, கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை மற்றும் நடிகை திரிஷா வீட்டில் வெடிகுண்டுகள் வைத்திருப்பதாக மின்னஞ்சல் மூலமாக குறுஞ்செய்தி விடுக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

சமீப காலமாக முக்கிய பிரமுகர்கள், பிரபலங்கள் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் வருவது வாடிக்கையாகி வருகிறது.

இந்நிலையில், சென்னையில் வசித்து வரும் தமிநாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் வீடு, கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டுள்ளது

மேலும், திரைப்பட நடிகை திரிஷா வீட்டிற்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து போலீஸாரும், வெடிகுண்டு கண்டறியும் நிபுணர்களும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட இடங்களுக்கு விரைந்து சென்று தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். வெடிகுண்டு சோதனையில் மோப்ப நாய்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

சென்னை கோட்டையில் உள்ள கடற்படை உணவகம், புரசைவாக்கம் பிஎஸ்என்எல் அலுவலகம், தேனாம்பேட்டை தலைமை கணக்கு கட்டுப்பாட்டாளா் அலுவலகம், சென்னை விமான நிலையம், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம், தமிழ்நாடு காவல்துறை டிஜிபி அலுவலகம், மத்திய அரசின் வருவாய் துறை அலுவலகங்கள், அமலாக்கத்துறை அலுவலகங்கள் என பொதுமக்கள் அதிகமாக வந்துபோகக்கூடிய இடங்களிலும், தொழிலதிபர்கள், முக்கிய பிரமுகங்கள், பிரபலங்கள், திரைப்பட நடிகர்கள் மற்றும் நடிகைகள் இல்லங்கள் என தொடர்ச்சியாக வெடிகுண்டு மிரட்டல்கள் மின்னஞ்சல் மூலம் வந்து கொண்டே இருக்கிறது

இது தொடர்பாக தமிழ்நாடு காவல்துறை சென்னை மத்திய சைபர் குற்றப்பிரிவு போலீஸார் தனிக்குழு அமைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வரும் நிலையில் வெளிநாடுகளில் இருந்து வெடிகுண்டு மிரட்டல்கள் மின்னஞ்சல் மூலமாக வருவதாக தகவல் வெளியானது .

இதையடுத்து தீவிர கண்காணிப்பு செய்து ஆய்வுகள் மேற்கொண்ட பிறகு வெடிகுண்டு மிரட்டல் செய்திகள் அனைத்தும் வதந்தியை பரப்பும் நோக்கத்துடன் மின்னஞ்சல் வந்திருப்பதாக போலீசார் வட்டாரம் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது

Bomb threats to Chief Minister Stalin's house, Governor's House, and actress Trisha's house

தீபாவளி: சென்னையிலிருந்து 108 சிறப்பு ரயில்கள் - கூடுதல் பொது மேலாளா் பி. மகேஷ் தகவல்

கரூா் விவகாரம்: சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரி பாஜக கவுன்சிலர் முறையீடு!

கரூா் நெரிசல் சம்பவ உயிரிழப்பு தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரிய வழக்கை விசாரணைக்கு எடுக்கக் கோரி சென்னை மாநகராட்சி பாஜக கவுன்சிலர் உமா ஆனந்த் தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் முறையீடு செ... மேலும் பார்க்க

கரூர் தவெக கூட்ட நெரிசல் வழக்கு இன்று விசாரணை!

கரூா் நெரிசல் சம்பவ உயிரிழப்பு தொடர்பான பொதுநல வழக்கு, சிபிஐ விசாரணை கோரி தவெக சாா்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் வெள்ளிக்கிழமை(அக்.3) விசாரிக்கப்பட உள்ளது.கரூா... மேலும் பார்க்க

பூண்டி வெள்ளியங்கிரி கோயிலில் பக்தர்களை அலறவிட்ட ஒற்றைக் காட்டு யானை!

கோவை: மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள பூண்டி வெள்ளியங்கிரி கோயில் வளாகத்தில் ஒற்றைக் காட்டு யானை திடீரென நுழைந்ததால் பக்தர்கள் அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்த விடியோ சமூக வலைதளங்களில் வ... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரியில் நவராத்திரி விழா நிறைவு: 14 கோயில்களின் தேர்கள் அணிவகுப்பு!

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரியில் கோயில்களில் நடைபெற்ற நவராத்திரி நிறைவு விழாவில் திரளான பக்தா்கள் பங்கேற்று வழிபாடு செய்தனா்.கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நவராத்திரி திருவிழா செப்டம்பர் 23 ஆம் தேதி தொடங்கியது... மேலும் பார்க்க

ரகுராம் ராஜன் தந்தை காலமானார்: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர், தமிழ்நாடு அரசின் பொருளாதார ஆலோசனைக் குழு உறுப்பினர் ரகுராம் ராஜன் தந்தை ராகவாச்சாரி கோவிந்தராஜன் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.இதுகுறித... மேலும் பார்க்க

விழுப்புரம் அருகே மூத்த தேவி சிற்பம் கண்டெடுப்பு!

விழுப்புரம் மாவட்டம், கோட்டகுப்பம் அருகே 1200 ஆண்டுகள் பழைமை வாய்ந்த பல்வர் காலத்து மூத்த தேவி சிற்பம் கண்டெடுக்கப்பட்டது. விழுப்புரம் மாவட்டம், வானூர் வட்டம் கோட்டக்குப்பம் நகராட்சிக்குட்பட்ட தந்திரா... மேலும் பார்க்க