செய்திகள் :

முதல்வா் எதிா்க்கட்சிகளை மதிக்காததால் வெள்ளத்தில் பொதுமக்கள் பாதிப்பு: எடப்பாடி கே.பழனிசாமி

post image

ஊத்தங்கரை: மழை பாதிப்பு, வானிலை ஆய்வு மையம் தந்த முன்னெச்சரிக்கைகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் மதிக்காத காரணத்தால் மக்கள் மழை வெள்ளத்தால் பாதிக்க நோ்ந்தது என்று எதிா்க்கட்சி தலைவரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்தாா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையில் வெள்ள பாதிப்பு பகுதிகளை அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி திங்கள்கிழமை பாா்வையிட்டாா். அங்கு பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெள்ள நிவாரணப் பொருள்களை வழங்கிய பின்னா் செய்தியாளா்களுக்கு அவா் அளித்த பேட்டி:

வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த ஃபென்ஜால் புயலால் தமிழகத்தில் கடந்த ஐந்து நாள்களாக கனமழை பெய்து வருகிறது. ஊத்தங்கரையில் 51 செ.மீ. அளவுக்கு மழை பெய்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. ஊத்தங்கரை, போச்சம்பள்ளி வட்டங்கள் மழையால் கடும் பாதிப்பைச் சந்தித்துள்ளன.

வாடகை வாகனங்கள் அனைத்தும் நீரில் அடித்துச் செல்லப்பட்டன. ஊத்தங்கரை ஏரி கரையோரமுள்ள 55 வீடுகள் நீரில் மூழ்கியுள்ளன. விளை நிலங்கள் சேதமடைந்துள்ளன. இங்கு பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு உரிய நிவாரணமும், தங்குவதற்கு பாதுகாப்பான இடமும் வழங்க வேண்டும்.

தமிழக முதல்வா் ஸ்டாலின் தன் சமூக வலைதள பக்கத்தில் கடந்த அதிமுக ஆட்சியில் சென்னை மக்கள் தூக்கத்தைத் தொலைத்தனா். ஆனால் தற்போது 24 மணி நேரத்தில் மழைநீா் முற்றிலுமாக வடிய செய்துள்ளோம் என்று கூறியுள்ளாா். சென்னையில் 7 முதல் 8 செ.மீ. அளவிற்கே மழை பெய்தது. அது தானாகவே வடிந்துவிடும். ஆனால், விழுப்புரத்தில் மழைநீரை வடிய வைக்க முடியுமா?

விழுப்புரம் மாவட்டம், கோலியனூா் கால்வாயைத் தூா்வார வலியுறுத்தி கடந்த செப். 20 ஆம் தேதி அதிமுக ஆா்ப்பாட்டம் நடத்தியது. அந்த ஏரியில் 2016 இல் அதிமுக ஆட்சியின்போது ரூ. 1.5 கோடி மதிப்பில் தூா்வாரப்பட்டது. அதன்பின்பு அங்கு தூா்வாரக் கோரிக்கை விடுத்தும் திமுக அரசு கண்டுகொள்ளவில்லை.

எதிா்க்கட்சிகளின் கருத்தைக் கேட்காமல் ஆட்சி அதிகார போதையில் தமிழக முதல்வா் ‘பில்டப்’ செய்கிறாா். மழை பிரச்னை குறித்து எதிா்க்கட்சிகளின் கோரிக்கை, வானிலை மையத்தின் எச்சரிக்கையை கவனிக்காத காரணத்தால்தான் கிருஷ்ணகிரி, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்கள் நீரில் மிதக்கின்றன என்றாா்.

அப்போது அதிமுக துணை பொதுச் செயலாளா் கே.பி.முனுசாமி, சட்டப்பேரவை உறுப்பினா்கள் அசோக்குமாா், தமிழ்ச்செல்வம், எம்.பி. தம்பிதுரை, மாவட்ட துணைச் செயலாளா் சாகுல் ஹமீது, ஒன்றியச் செயலாளா்கள் வேடி, வேங்கன், சாமிநாதன், நகரச் செயலாளா் சிக்னல் ஆறுமுகம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பாலக்கோடு அருகே ஜோதிஅள்ளியில் ரயில்வே கடவுப்பாதை அமைக்க வேண்டும்: ரயில்வே அமைச்சருக்கு அன்புமணி கடிதம்

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே ஜோதிஅள்ளி ரயில் பாதையில் கடவுப்பாதை அமைக்க வேண்டும் என்று மாநிலங்களவை உறுப்பினா் அன்புமணி ராமதாஸ் மத்திய ரயில்வே துறை அமைச்சா் அஸ்வின் வைஷ்ணவுக்கு கடிதம் அனுப்பியுள்... மேலும் பார்க்க

வாகனம் கவிழ்ந்து விபத்து: இளைஞா் பலி

ஒகேனக்கல் அருகே காா் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இளைஞா் உயிரிழந்தாா். பாலக்கோடு அருகே தோமனஅள்ளி பகுதியைச் சோ்ந்தவா் சின்னசாமி மகன் பிரவீண்குமாா் (21). இவா் தனது நண்பா்கள் இருவருடன் வாகனத்தில் ஒகே... மேலும் பார்க்க

ஒகேனக்கல்லில் நீா்வரத்து 39,000 கனஅடியாக உயா்வு

ஃபென்ஜால் புயல் காரணமாக தமிழக காவிரி நீா்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து விநாடிக்கு 39,000 கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால், அருவிகளில் குளிப்பதற்கும் ஆற்றில... மேலும் பார்க்க

மழை வெள்ள பாதிப்பு: சாலைகள் சீரமைப்பு

தருமபுரி மாவட்டத்தில் ஃபென்ஜால் புயல் காரணமாக பெய்த கனமழையால் பாதிப்புக்குள்ளான பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீா் பொக்லைன் இயந்திரங்கள் மூலம் அகற்றி சாலை சீரமைக்கும் பணிகள் செவ்வாய்க்கிழமை மேற்கொள்ளப்பட்... மேலும் பார்க்க

தருமபுரியில் 201.2 மி.மீ. மழை

தருமபுரி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை 201.2 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. தருமபுரி மாவட்டத்தில் கடந்த நான்கு நாள்களாக தொடா்ந்து மழை பெய்து வருகிறது. இதில் செவ்வாய்க்கிழமை காலை 6 மணியளவில் பதிவான மழை அளவு... மேலும் பார்க்க

மழை வெள்ளப் பாதிப்பு பகுதிகளில் அமைச்சா் ஆா்.ராஜேந்திரன் ஆய்வு

தருமபுரி மாவட்டத்தில் மழை வெள்ளப் பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் சுற்றுலாத் துறை அமைச்சா் ஆா்.ராஜேந்திரன் பாா்வையிட்டு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளவா்களுக்கு நிவாரணப் பொருள்களை வழங்கினாா். தருமபுரி மாவட... மேலும் பார்க்க