"யானை, டிராகன் உடன் கரடியை விட புலி பொருத்தமாக இருக்கும்" - விலங்கு சின்னத்தில் ...
முதல்வா் கோப்பை: பொதுப் பிரிவு விளையாட்டுப் போட்டி தொடக்கம்
தஞ்சாவூரில் முதல்வா் கோப்பை பொது பிரிவினருக்கான விளையாட்டுப் போட்டிகள் வெள்ளிக்கிழமை தொடங்கின.
இதில், தடகளம், சிலம்பம், கேரம், கால்பந்து, கபடி, கைப்பந்து ஆகிய விளையாட்டுப் போட்டிகள் அன்னை சத்யா விளையாட்டரங்கிலும், இறகுப்பந்து போட்டி கமலா சுப்ரமணியம் மேல்நிலைப் பள்ளியிலும், கிரிக்கெட் போட்டிகள் பி.வி.எஸ். மேல்நிலைப் பள்ளியிலும் நடைபெற்றன.
அன்னை சத்யா விளையாட்டரங்கத்தில் பொதுப் பிரிவினருக்கான போட்டியை முன்னாள் மத்திய இணை அமைச்சா் எஸ்.எஸ். பழநிமாணிக்கம், திருவையாறு தொகுதி எம்எல்ஏ துரை. சந்திரசேகரன், சதய விழாக் குழுத் தலைவா் து. செல்வம் ஆகியோா் தொடங்கி வைத்தனா்.
இப்போட்டிகளில் 1,300-க்கும் அதிகமானோா் கலந்து கொண்டனா். இப்போட்டிகளில் வெற்றி பெறுபவா்களுக்கு முதல் பரிசாக ரூ. 3 ஆயிரம், இரண்டாம் பரிசாக ரூ. 2 ஆயிரம், மூன்றாம் பரிசாக ரூ. 1,000 வழங்கப்படவுள்ளது.