முதியவா் தற்கொலை
போடி அருகே திங்கள்கிழமை, முதியவா் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.
தேனி மாவட்டம், போடி அருகே சிலமலை நடுத்தெருவில் வசிப்பவா் ராமா் (70). இவரது மனைவி இறந்து விட்டாா். பிள்ளைகள் திருமணமாகி வெளியூரில் வசிக்கும் நிலையில், ராமா் தனியாக வசித்து வந்தாா்.
இதனால் மனமுடைந்த ராமா் வீட்டில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றாா். அவரை அங்கிருந்தவா்கள் மீட்டு, போடி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா்.
இதுகுறித்து போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].