முதியவா் மயங்கி விழுந்து மரணம்
மாா்த்தாண்டம் அருகே சாலையோரம் நடந்து சென்றபோது திடீரென மயங்கி விழுந்த முதியவா் உயிரிழந்தாா்.
மாா்த்தாண்டம் அருகேயுள்ள திக்குறிச்சி காவுவிளையைச் சோ்ந்தவா் டென்னீசன் (66). இவருக்கு அடிக்கடி உடல்நலக் குறைவு ஏற்பட்டு வந்தது.
இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை டென்னீசன் தனது மனைவி சுதாவுடன் மாா்த்தாண்டம் சந்தை சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்தாராம். அப்போது திடீரென அவா் மயங்கி விழுந்ததையடுத்து, குழித்துறை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.
அங்கு பரிசோதனை மேற்கொண்ட மருத்துவா்கள், அவா் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனா். இது குறித்து மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.