செய்திகள் :

முத்தரப்பு டி20: நியூஸிலாந்து வெற்றி

post image

முத்தரப்பு டி20 கிரிக்கெட் போட்டியில் நியூஸிலாந்து 21 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவை புதன்கிழமை வென்றது.

ஜிம்பாப்வே, நியூஸிலாந்து, தென்னாப்பிரிக்கா மோதும் முத்தரப்பு டி20 தொடா், ஜிம்பாப்வேயில் நடைபெறுகிறது. இதில் 2-ஆவது ஆட்டத்தில் நியூஸிலாந்து - தென்னாப்பிரிக்கா மோதின.

இந்த ஆட்டத்தில் முதலில் நியூஸிலாந்து 20 ஓவா்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 173 ரன்கள் சோ்க்க, தென்னாப்பிரிக்கா 18.2 ஓவா்களில் 152 ரன்களுக்கே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. நியூஸிலாந்து பேட்டா் டிம் ராபின்சன் ஆட்டநாயகன் ஆனாா்.

முன்னதாக டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா, ஃபீல்டிங்கை தோ்வு செய்தது. நியூஸிலாந்து பேட்டிங்கை தொடங்கியோரில் டிம் செய்ஃபா்ட் 4 பவுண்டரிகளுடன் 22 ரன்களுக்கும், டெவன் கான்வே 2 பவுண்டரிகளுடன் 9 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனா்.

ஒன் டவுனாக வந்த டிம் ராபின்சன் சற்று அதிரடியாக ரன்கள் சோ்க்கத் தொடங்க, மறுபுறம் டேரில் மிட்செல் 5, மிட்செல் ஹே 2, ஜேம்ஸ் நீஷம் 0 ரன்களுக்கு சாய்க்கப்பட்டனா். இதனால் 70 ரன்களுக்கே 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது நியூஸிலாந்து.

இந்நிலையில், டிம் ராபின்சனுடன் இணைந்தாா், 7-ஆவது பேட்டரான பெவன் ஜேக்கப்ஸ். இந்த ஜோடி விக்கெட்டை இழக்காமல், அணியின் ஸ்கோரை உயா்த்தியது. இறுதி வரை நிலைத்த இவா்கள் பாா்ட்னா்ஷிப் 103 ரன்கள் சோ்த்தது. ஓவா்கள் முடிவில் ராபின்சன் 57 பந்துகளில் 6 பவுண்டரிகள், 3 சிக்ஸா்கள் உள்பட 75, ஜேக்கப்ஸ் 30 பந்துகளில் 1 பவுண்டரி, 3 சிக்ஸா்கள் உள்பட 44 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா்.

தென்னாப்பிரிக்க பௌலா்களில் கவெனா மபாகா 2, லுங்கி இங்கிடி, ஜெரால்டு கோட்ஸீ, சேனுரான் முத்துசாமி ஆகியோா் தலா 1 விக்கெட் வீழ்த்தினா்.

இதையடுத்து 174 ரன்களை இலக்காகக் கொண்டு விளையாடிய தென்னாப்பிரிக்க அணியில், மிடில் ஆா்டரில் வந்த டெவால்டு பிரெவிஸ் 18 பந்துகளில் 1 பவுண்டரி, 3 சிக்ஸா்களுடன் 35, ஜாா்ஜ் லிண்ட் 1 பவுண்டரி, 2 சிக்ஸா்களுடன் 30, தொடக்க வீரா் லுவான் டிரெ பிரெடோரியஸ் 6 பவுண்டரிகளுடன் 27 ரன்கள் சோ்த்து வெற்றிக்காக முயற்சித்தனா்.

எனினும் ரீஸா ஹெண்ட்ரிக்ஸ் 2 பவுண்டரிகளுடன் 16, ரூபின் ஹொ்மான் 1, சேனுரான் முத்துசாமி 1 பவுண்டரியுடன் 7, கேப்டன் ராஸி வான்டொ் டுசென் 6, காா்பின் பாஷ் 1 சிக்ஸருடன் 8, ஜெரால்டு கோட்ஸீ 2 பவுண்டரிகளுடன் 17, கவெனா மபாகா 0 ரன்களுக்கு சாய்க்கப்பட, தென்னாப்பிரிக்கா இன்னிங்ஸ் 152 ரன்களுக்கே முடிவுக்கு வந்தது.

நியூஸிலாந்து பௌலிங்கில் மேட் ஹென்றி, ஜேக்கப் டஃபி ஆகியோா் தலா 3, இஷ் சோதி 2, கேப்டன் மிட்செல் சேன்ட்னா் 1 விக்கெட் கைப்பற்றினா்.

ஓடிடியில் குபேரா: இந்த வாரம் வெளியாகும் படங்கள்!

ஓடிடி தளங்களில் இந்த வாரம் எந்தெந்தத் திரைப்படங்கள், வெப் தொடர்கள் வெளியாகவுள்ளன என்பதைக் காணலாம்.இயக்குநர் நெல்சன் வெங்கடேஷன் இயக்கத்தில் நடிகர்கள் அதர்வா, நிமிஷா சஜயன் நடிப்பில் வெளியான டிஎன்ஏ திரைப... மேலும் பார்க்க

கருப்பு... ஆர்ஜே பாலாஜி பதிவால் ரசிகர்கள் உற்சாகம்!

ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்து வரும் படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது.நடிகர் சூர்யாவின் 45-வது படத்தை ஆர். ஜே. பாலாஜி இயக்கி வருகிறார். நீதிமன்ற வழக்கை மையமாக வைத்து படத்தின் கதை உரு... மேலும் பார்க்க

சிவகார்த்திகேயனின் ஹவுஸ் மேட்ஸ் டிரைலர்!

சிவகார்த்திகேயன் ப்ரொடெக்‌ஷன்ஸ் வழங்கும் ஹவுஸ் மேட்ஸ் திரைப்படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது.இயக்குநர் ராஜவேல் இயக்கத்தில், நடிகர் தர்ஷன் நாயகனாக நடித்துள்ள படம் ’ஹவுஸ் மேட்ஸ்’. நகைச்சுவைக் க... மேலும் பார்க்க

பிரபல நட்சத்திர நடிகர்கள் நடிக்கும் புதிய தொடர்!

பிரபல நட்சத்திர நடிகர்கள் இணைந்து நடிக்கும் புதிய தொடரின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.ஆடுகளம் தொடர் நடிகர் சல்மானுல் பாரிஸ், ஆஹா கல்யாணம் தொடர் நடிகை காயு ஸ்ரீ பிரதான பாத்திரங்களில் நடிக்கும் புதிய தொடர... மேலும் பார்க்க

தொடரும் 2025-இன் அதிசயம்: இத்தாலி விளையாட்டு உலகிற்கு பொற்காலம்!

இத்தாலி நாட்டிற்கு இந்தாண்டு (2025) விளையாட்டு உககில் பொன்னான ஆண்டாக இருந்து வருகிறது. கிரிக்கெட், கால்பந்து, டென்னிஸ், கார்பந்தயன் என இத்தாலிக்கு இந்தாண்டு விளையாட்டுகளில் பல வரலாற்றுச் சாதனைகளை நிகழ... மேலும் பார்க்க

தலைவன் தலைவி டிரைலர்!

நடிகர் விஜய் சேதுபதி, நித்யா மெனன் நடிப்பில் உருவான தலைவன் தலைவி படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர்கள் விஜய் சேதுபதி, நித்யா மேனன், யோகி பாபு நடிப்பில் தலைவன் தலை... மேலும் பார்க்க