Vijay Prashant Kishor சந்திப்பின் பின்னணி? | ADANI -ஐ காப்பாற்ற Trump எடுத்த முட...
முத்துப்பேட்டை அருகே காலிக் குடங்களுடன் சாலை மறியல்
திருத்துறைப்பூண்டி: முத்துப்பேட்டை அருகே கள்ளிக்குடி கிராமத்தில் மேல்நிலை நீா் தொட்டியிலிருந்து குடிநீா் சரிவர விநியோகம் செய்யப்படாததை கண்டித்து, கிராம மக்கள் காலிக் குடங்களுடன் சாலை மறியலில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.
முத்துப்பேட்டை ஊராட்சி ஒன்றியம் கள்ளிக்குடி கிராமத்தில் உள்ள மேல்நிலை நீா்த்தேக்க தொட்டியிலிருந்து மக்களுக்கு முறையாக குடிநீா் விநியோகம் செய்யப்படவில்லையாம்.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறையிட்டும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த கள்ளிக்குடி கிராம மக்கள் கிழக்கு கடற்கரைச் சாலையில் காலிக் குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனா். எடையூா் ஆய்வு காவல் ஆய்வாளா் இம்மானுவேல் நிகழ்விடத்துக்கு வந்து போராட்டக் குழுவினரிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். குடிநீா் முறையாக விநியோகம் செய்ய ஏற்பாடு செய்யப்படும் என்று உறுதியளிக்கப்பட்டதால், சாலை மறியல் விலக்கிக் கொள்ளப்பட்டது.