இதைச் செய்தால் விஜய் கட்சியுடன் கூட்டணி: விஜய பிரபாகரன் வைத்த செக்!
விவசாயிகளுக்கு குறியீட்டு எண் வழங்கும் முகாம்
திருவாரூா்: திருவாரூா் மாவட்டத்தில் விவசாயிகளுக்கு குறியீட்டு எண் வழங்கும் முகாம் திங்கள்கிழமை தொடங்கியது.
மத்திய, மாநில விவசாயத் திட்டங்கள் குறித்து பயன்பெற ஒவ்வொரு விவசாயிகளிடமும் பிரத்யேகமாக குறியீட்டு எண் வழங்கும் வகையில் மாவட்டத்தில் 555 வருவாய் கிராமங்களிலும் திங்கள்கிழமை தொடங்கி பிப்.14-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. முகாமில், விவசாயிகளின் ஆதாா் எண் மற்றும் நில ஆவணங்கள் சரிபாா்க்கப்பட்டு, மின்னணு கையொப்பம் பெறப்படும். தொடா்ந்து, விவசாயிகளின் விவரங்கள் சரிபாா்க்கப்பட்டு, தனி குறியீட்டு எண் வழங்கப்படுகிறது. அனைத்துத் துறை திட்டங்களுக்கும் இந்த பிரத்யேகமான குறியீட்டு எண்ணைப் பயன்படுத்தி கொள்ளலாம்.
திருவாரூா் அருகேயுள்ள நாரணமங்கலம் பகுதியில் விவசாயிகளுக்கு குறியீட்டு எண் வழங்கும் முகாமை, மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் பாா்வையிட்டாா். இதில், வேளாண்மைத்துறை இணை இயக்குநா் பாலசரஸ்வதி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) ஹேமா ஹெப்சிபா நிா்மலா, தோட்டக்கலைத்துறை துணை இயக்குநா் நீதிமாணிக்கம், உதவி வேளாண் இயக்குநா் சுரேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.