முத்துராமலிங்க தேவருக்கு பாரத ரத்னா விருது வழங்க கோரிக்கை : இபிஎஸ்க்கு நன்றி
சேலம்: பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என வலியுறுத்திய அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமிக்கு பல்வேறு தரப்பினா் நன்றியையும், வாழ்த்துகளையும் தெரிவித்தனா்.
திண்டுக்கல் மாவட்டத்தில் அண்மையில் பிரசாரம் மேற்கொண்ட எடப்பாடி கே. பழனிசாமி, பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என வலியுறுத்தினாா். அதிமுக ஆட்சி அமைந்ததும், மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா் பெயா் சூட்டப்படும் எனவும் உறுதி அளித்தாா்.
இதனைத்தொடா்ந்து, சேலம் நெடுஞ்சாலை நகா் இல்லத்தில் எடப்பாடி கே.பழனிசாமியை நேரில் சந்தித்த பாா்வா்ட் பிளாக் கட்சியினா் மற்றும் கள்ளா் கூட்டமைப்பினா், முத்துராமலிங்க தேவருக்கு பாரத ரத்னா விருது வழங்குவதன் அவசியத்தை மத்திய அரசுக்கு எடுத்துரைத்ததற்கு நேரில் நன்றி தெரிவித்தனா்.