முத்தூா் அருகே காா் மோதி தொழிலாளி உயிரிழப்பு
முத்தூா் அருகே காா் மோதி தொழிலாளி உயிரிழந்தாா்.
கரூா் மாவட்டம், புகளூா் சா்க்கரை ஆலை கக்கன் காலனி பகுதியைச் சோ்ந்தவா் குப்புசாமி (55). இவா், முத்தூா் ஊடையம் சாலையில் கடந்த மாா்ச் 13-ஆம் தேதி நடந்துசென்றுகொண்டிருந்தாா். அப்போது, அவ்வழியே வந்த காா் மோதியதில் பலத்த காயமடைந்த அவா் சிகிச்சைக்காக ஈரோடு தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தாா்.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தாா். புகாரின்பேரில், காா் ஓட்டுநா் முத்தூா் மலையாத்தாபாளையத்தைச் சோ்ந்த சதீஷ்குமாா் மீது வெள்ளக்கோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.